Tuesday, August 7, 2012
பதுரு சஹாபா நினைவு தினம்
ஆயிரம் எதிரிகள் அங்கே
.....ஆயுதம் அற்றவர் இங்கே
ஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)
...ஆணையைத் தயக்கமும் இன்றி!
சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்
....சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)
அற்புதம் என்பதை அங்கே
.... அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!
வானவர்க் கூட்டமும் வந்து
.....வாளினால் வெட்டிட உதவ
ஆணவக் கூட்டம் ஒழிந்து
...அக்களம் வென்றனர் காணீர்!
இச்சிறு கூட்டமும் வெற்றி
....இன்றியே அழியுமே யானால்
அச்சமாய் உன்னையும் அல்லாஹ்(என்று)
....அழைத்திட எவருமே உண்டோ”
நெற்றியைத் தரையினில் வைத்து
....நெகிழ்வுடன் நபிகளார்(ஸல்) வேண்ட
வெற்றியைத் தருவதை அல்லாஹ்
....வேகமாய் நிறைவுற செய்தான்!
தீனெனும் செடியினைக் காத்த
...தியாகிகள் இலையெனில் நாமும்
தீன்குல பிறப்பினில் இல்லை
...தியாகிகள் நினைவுகள் வேண்டும்
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம்
புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்
Newer Post
Older Post
Home