இஸ்லாத்தில் பலரும் பல வகையினராக பிரிந்து நின்று அல்லாஹ்வைஅறியாமல்தத்தளிக்கின்
சிலர்கஉபாவில்அல்லாஹ்அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான் எனவும்நினைத்து தொழுது வருகின்றனர்.
சிலர் கஉபா திசையில்அல்லாஹ் இருக்கிறான் (மற்ற திசைகளிலில்லை) எனவும்,
வேறு சிலர் பள்ளிவாசலில் தான் இறைவன் இருக்கிறான் எனவும் மௌட்டிகமாக எண்ணி வாழ்க்கையை வீணடித்து விடுகின்றனர்.
பேரும் ஆயிரம் விதமாகஅல்லாஹ்வை நினைத்துதொழுது வருகின்றனர்.அப்படியானால் ஆயிரமாயிரம் ஆண்டவன் இருக்கவேண்டும். பற்பல சிந்தனைகளோடு வணங்குவதும் சிலைமுன்நின்று வணங்குவதும் ஒன்றுபோல் ஆகிவிடுகின்றன.
இந்நிலையிலிருந்துமனிதனைச் சரியான வழியில் கொண்டு செல்லவேஇஸ்லாத்தில் தௌஹீதென்னும் ஆன்மீகக் கொள்கை சிறந்த முறையில்தெளிவாகக்கூறப்படுகிறது
இஸ்லாம்அறிவுப்பூர்வமான மார்க்கம்,தத்துவப் பூர்வமான மார்க்கம்,எல்லாத்தத்துவார்த்
மிகவும் முக்கியமானதும்அதுவேதான்.
தவ்ஹீதை விளங்குவதற்குஏழுபடித்தரங்களைக் கூறுகின்றனர்.அவற்றில் நான்காவது படித்தரத்திலாவது இருக்கவேண்டும்.
தவ்ஹீதை விளங்கியவர்களிலேயே பல குழப்பங்களை நாம் காணமுடிகிறது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள்ம னோநிலைக்கு தக்கவாறெல்லாம் தவ்ஹீதை விளங்கியிருப்பதைக் காணமுடிகிறது.
ஒவ்வொருவரும் ஓர்அளவில்தான் தவ்ஹீதை விளங்கியவர்களாக இருக்கிறார்களேயல்லாமல் பூரணமாக விளங்கியவர்கள் மிகச்சொற்பமாகவே காணப்படுகின்றனர்.
நாம் ஒரு விசயத்தைக் கூறும் போது அங்கு பத்துபேர் இருந்தால்பத்துபேரும் பத்துவிதமாக விளங்கிக் கொள்கிறார்கள். சம்பூர்ணவிளக்கம் இன்னும் அதிகமானவர்களிடம் வரவில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது.
தவ்ஹீதை வேறுபடுத்தி விளங்கக்கூடாது தவ்ஹீத் வாழ்க்கையோடு ஒட்டியதாக விளங்க வேண்டும். நம்மிலே அநேகர் வியாபாரம் மற்றும் தொழில்களில் ஈடுபட்டிருப்பினும் நாம் செய்யக்கூடிய தொழிலிலும் வியாபாரத்திலும் தவ்ஹீதின் (ஏகத்துவத்தின்) நிலையைக் கைக்கொள்ளவேண்டும்.
தவ்ஹீத் சம்பந்தமான விளக்கம் ஒருவருக்குத் தேவைப்பட்டால்அதற்க்கான தேட்டம் இருக்கவேண்டும். அவ்வாறு ஒருவருக்குத் தேட்டம் ஏற்பட்டு அடுத்து வரக்கூடிய மாதாந்திரக்கூட்டத்திற்குச் செல்வாரானால் அவருக்கு ஏற்பட்ட
சந்தேகத்திற்கு நிச்சயம் யார் மூலமாவது நிவர்த்தி கிடைத்துவிடும்.
இதனாலேயே நாம் மாதாந்திரக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டியது கடமை எனக்கூறி வருகிறோம்.
---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.
Thanks - Sirajudeen Madukkur