ஒரு செய்குவிடம் முரீத் அதிககாலம் இருந்து விட்டு செய்குவை விளங்காமல் பொறாமை தற்பெருமை திமிர் அகம்பாவம் இவைகளினால் விலகிச் சென்றால் அவர்களின் நிலை என்னவாகும்.?
அவர்களுக்கு ரசூல் (ஸல்)அவர்களின் ஷபாஅத் மற்றும் அல்லாஹ்வின் கருணைக் கிடைக்குமா.?
அவர்கள் செய்குவிடம் ஏதேனும் தவறு கண்டு போனதாச் சொல்வார்கள். அதிக காலம் இருந்தவருக்கு எப்படி தவறொன்று உண்டாகிறது.? அதற்கு முன்பு தவறு ஏற்படவில்லையா.? இப்போதுதான் தவறு ஏற்பட்டுள்ளதா.?
முரீதுக்கு பொறாமை தற்பெருமை அகம்பாவம் திமிர் இப்படி சிலருக்கு ஏற்பட்டால் அது பெரிய ஆபத்தான நிலை. எந்த இடத்தில் கொண்டுபோய் விடுமென்றுச் சொல்ல முடியாது.
சரி இல்லை என்றால் போய் மௌனமாக இருக்கவேண்டும். மௌனமாக இல்லாமல் தேவையில்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டு தேவையில்லாத கதைகளை கதைச்சுக் கொண்டு அசிங்கமான விஷயங்களை பேசிக் கொண்டு இருப்பதாக இருந்தால் இவ்வளவு காலம் (செய்குவிடம்)இருந்து கேட்டுக் கொண்ட நன்மைகளெல்லாம் அவர்களுக்குப் போய் அம்புகளாக குத்தும்.
இவ்வளவு காலம் பெற்ற நன்மைகள் அறிவுகள் அது சம்பந்தபட்டவைகள் இதற்கு முன்பு செய்குவை பற்றிப் புகழ்ந்து பேசின புகழ்ச்சிகள் எல்லாம்சேர்ந்து மோசமான இடங்களில் போய் அம்பாக குத்தும். அது எங்கெங்கே குத்தும் எனச் சொல்ல இயலாது. அது இதயத்திலேயும் குத்தலாம். முக்கியமான நரம்புகளிலேயும் குத்தலாம் உறுப்புகளிலேயும் குத்தலாம்.
அப்படி குத்துபட்டது என்றுச் சொன்னால் கடைசியில் யாராலேயும் திரும்பமுடியாது நெருங்கமுடியாது தடுக்க முடியாது அதுதான் பெரிய ஆபத்து.
அதனால்தான் மித்த கவனமாக இருக்கவேண்டும் எனச்சொல்வது. ஏனென்றால் அப்படி நடந்திருப்பது எல்லோருக்கும் தெரியும்.
முன்பிருந்த வலிமார்கள் காலத்தில் அதற்கு பின்னால் இருந்த காலத்திலும் இனிமேலும் இருக்கக்கூடிய காலத்திலும் இப்படி நடந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அது பெரிய ஆபத்தாக போய்விடும். அக்குபஞ்சரல்ல இது.
இது மோசமானது மித்தம் பயப்படவேண்டும் அல்லாஹ்வுக்கு.
அதாவது நீங்கள் ஏதோ ஒரு பரிட்சை எடுக்குறீர்கள் அதன் ரிசல்ட் வரும்வரை எவ்வளவு காலம் யோசிக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆறுமாதமோ அல்லது ஒருவருடமோ பார்ப்பீர்கள். ரிசல்ட் வரவில்லை என்றால் திரும்ப அவரிடம் சென்று கேட்பீர்கள்.
இந்தமாதிரி விஷயங்களுக்கு சோதனைகளுக்கு ரிசல்ட் இதுமாதிரிதான் வரும். ஆனால் அந்த ரிசல்ட் மிக மோசமான ரிசல்ட் மிக ஆபத்தான ரிசல்ட். அப்படி எத்தனையோ பேர்களுக்கு அது மாதிரியான ரிசல்ட் வந்துவிட்டது. அது எல்லோருக்கும் தெரியும். அறியவில்லை என்று சொல்லவும் கூடாது. தெரியாது என்று சொல்லவும் இயலாது.
கண்முன்னால் கண்ட விஷயங்கள் நிறைய உண்டு. ஆகவே எனக்கு எல்லாம் முடியும் என்று துள்ளுகிற நேரத்தில் ஆபத்துகள் தான் வந்து முடியும். கல்லு கரடு உடைந்த கண்ணாடித் துண்டுகளில் குத்திக் கொண்டார்கள் என்றால் ஆபத்துதான்.
ஒவ்வொரு வகையான ஆபத்தான நோய்கள் மனிதனுக்கு மனிதன் உண்டாகிறது. அது மிக பயங்கரமான பலவகையான நோய்கள் இருக்கின்றன. நீங்கள் அறியாத நோய்களும் உள்ளது. புதிது புதிதான நோய்கள் அவரவர்கள் எதைச் செய்கிறார்களோ அல்லாஹ் அதைப்பார்த்து உங்களுக்கு இதுதான் ஜிஸா என்று கொடுத்திடுவான்.
ஓவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு வகையான நோய்களில் மக்கள் அவதிப்படுவதை கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ஒருவருக்கு காலில் ஒரு நோவு பிடித்தது. டாக்டர் கூறினார் இந்த நோய் ஆபத்தானது இவர் நன்றாக குடிக்கவேண்டும் குடித்தால் நரம்புகள் விரிவடைந்து சரியாகிவிடும் என்றார்.
அவர் நன்றாக தொழுது கொண்டிருந்த மனிதர் குடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
பிறகு விரல்களில் புண் உண்டாகி காலில் உண்டாக கொஞ்சம் கொஞ்சமாக இரு கால்களையும் வெட்டி கையை வெட்டவருகிற நேரத்தில் மருந்தைப்போல் குடிக்க ஆரம்பித்தார்.ஏதோ அவரின் மனைவி நல்ல பெண்ணானதால் மித்தம் கவனமாக குழந்தை பிள்ளையைப்போல் பாதுகாத்து நீராட்டி துடைத்து பவுடரெல்லாம்போட்டு நல்ல நிலையில் வைத்திருந்தார்.
அந்த மனைவி எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு சென்றாலும் விரட்டிவிட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவோ உதவிசெய்துள்ளார். யாருமே அவரைமதிக்கவில்லை. இப்படியான நிலை ஒரு மனிதனுக்கு வரக்கூடாது. முன்பே யோசிக்கவேண்டும்.
அல்லாஹ்வுக்கு பயப்புடவேண்டும் அவனுக்கு இந்தமாதிரி சில விஷயங்கள் இருக்கிறது நாடி செய்து விட்டான் என்றால் என்ன செய்வது.?
மனிதனுடைய தற்பெருமை எங்கே போகப்போகிறது. ஓன்றும் செய்யஇயலாது.
அல்லாஹ்வுடைய நாட்டம் அது. எந்த டாக்டரும் ஒன்றும் செய்ய முடியாது. சித்ரவதை என்று சொல்வது இதுதான்.அல்லாஹ் யாவரையும் காப்பாற்ற வேண்டும். ஆனால் முரட்டுதனமாகவும் மிருகத்தனமாகவும் அல்லாஹ்வுக்கு மாறாகவும் அநியாயமான முறையில் நடக்கிறவனுக்கு அல்லாஹ் கொடுக்கவும் வேண்டும். அப்போது தான் மற்றவன் பார்த்து பயப்படுவான்.
அப்படி எவ்வளவோ மோசமான விஷயங்கள் எல்லாம் நடக்கிறது. என்னென்ன நோய்கள் எல்லாம் இருக்கிறது. அதற்கு நாம் பயப்புடவேண்டும். அல்லாஹ் எங்களுக்கு வராமல் காப்பாற்றவேண்டும். மனநிம்மதியாக நாம் இருக்கவேண்டும். எப்பவுமே அந்தமாதிரியான நிலைதான் மனிதனுக்கு அவசியம். அதை நினைத்து பயந்து நாம்வாழவேண்டும்.
அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் எவன் துள்ளுகிறான் என்று.!
துள்ளினால் சரிவந்து விடுமா,?
அல்லாஹ்வுடைய சக்திக்கு முன்னால் யாருமே நிற்க முடியாது. சுனாமி வந்தது என்ன நடந்தது பார்த்தீர்களா.?
பத்து பதினைந்து நிமிடம்தான் தான் சுனாமி .பிணங்களெல்லாம் எங்கெங்யோ போனது. ஒருகடல் அதனுடைய ஆபத்தைப் பாருங்கள். நெருப்பும் அப்படித்தான் பனிபெய்கிறதே அதுவும் அப்படித்தான். இந்தமாதிரியான நிலைகள் மனிதனுக்கு வரவும் கூடாது. அல்லாஹ்விடம் இருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சாபங்களை பெற்றுக் கொள்ளவும் கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக ஆமீன்.
- இமாம் அஸ்சையிது கலீல்அவ்ன் மௌலானா அவர்கள்