Sunday, April 7, 2013

இம்மையில் குருடன்; மறுமையில் குருடன்

ஒரு ஆலிம் வஹ்ஹாபியாம்; அவருடைய பிள்ளையை சுன்னத்வல் ஜமாத்தில் படிக்க வைத்திருந்தாராம். ஆட்கள் போய் கேட்டார்களாம். ஏன் நீங்க வஹ்ஹபியாய் இருக்கிறீங்க உங்களுடைய பிள்ளையை சுன்னத்வல் ஜமாத்தில் படிக்க வைத்திருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, இது இந்த உலகிற்கு அது ஆகிராவிற்கு என்றாராம். இவனுடைய பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கும். அவன் அவனுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதையும் செய்து கொள்வான் உலகத்திற்கு. உலகத்தில் செய்ததுதானே ஆகிராவில் பிரதிபலிக்கும். உலகத்தில் நாம் எதைச்செய்கிறோமோ அதுதான் ஆகிராவில் பிரதிபலிக்கும். அதுமாதிரி ஒவ்வொரு விசயத்திலும் நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். இந்த வுலகத்தில் நாம்எதைச் செய்கிறோமோ; செவதற்குத் தான் தவ்பா அது, இதெல்லாம் இருக்கு. இதையெல்லாம் செய்து முடித்து நல்ல மனிதராக வாழனும். பாவம் செய்து இருந்தோமென்றால் தவ்பா செய்து அதுக்குள்ளவைகளை செய்து நாங்க இங்கே துப்புரவா இருக்கணும். எங்களுக்கு இங்கே தான் தவ்பாச்செய்ய இயலும். அங்கே போய் தவ்பாச் செய்ய இயலாது எங்கபோய்? அங்கேபோய் எங்கே தவ்பாச் செய்ய போறீங்க. அங்கே கேள்விக் கணக்குக்கு இடமிருந்தா தவ்பாச் செய்ய இயலாதே?. நீங்க ஒரு பரீட்சைக்குப் போறீங்க; நல்லா படிக்கிறீங்க, படிச்சி முடிச்சிட்டு பரீட்சைக்கு போறீங்க, போற இடத்துல உங்க புத்தகத்தை வைத்து வாசிக்க முடியுமா? படிக்க முடியுமா? அங்க வெரட்டீருவான் போ, போ என்று பரீட்சை எழுதற இடத்துல இந்த வேலையைச் செய்ய இயலாது. அப்ப இந்த வேலையை முதல்ல நாங்க இங்க முடிச்சிறனும். அங்க போனத்துக்குப் பிறகு படிக்க இயலாது. அதுனால அங்க தவ்பா இல்லை. அதுனால எல்லா ஒழுங்கு பிரகாரமும் இங்கே நாங்க நடந்து கொள்ள முயற்சி செய்யணும். ஆனால் நிச்சயம் அது, இங்க நடக்குறது அங்கே பிரதிபலிக்கும் என்பது நிச்சயம். அதனால அதுல நாங்க கவனமாயிருந்து ஒழுங்குப்படி நடந்து வரணும். -----சங்கை மிகுசெய்கு நாயகம் அவர்கள்.(2012 மதுக்கூரவிஜயத்திலிருந்து தகவல் :M.A சிராஜுதீன் . துபாய்.