துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப்பின் புனித புர்தாஷரீப் ஓதப்பட்டது அதன் பின் செப்டம்பர் மாதக்கூட்டம் நிகழ்ந்தது.
இக்கூட்டத்திற்கு கீழக்கரை காதர்ஷாகிப் அவர்கள் முன்னிலை வகிக்க திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா தலைமை வகித்தார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கமாக அடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது நூறி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள்.
வஹ்தத்துல் உஜூது பாடலை கொடிக்கால் அலாவுதீன் பாட அதன் தழிழாக்கத்தை ஆலிவூர் அபுல்பஸர் செய்தார்.
நபிப்புகழ் பாடலை மதுக்கூர் தாவுது பாடினார்.
ஞானப்பாடலை அமீர்அலி பாடினார்.
தலைமை உரையுடன் பொதுச் செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் உரைநிகழ்த்தினார் அவரைத் தொடர்ந்து அதிரை அப்துல்ரஹ்மான் மற்றும் அமீர்அலி உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக தவ்பா பைத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப்பின் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது பின் மஃரிப் தொழுகையுடன் இனிதே கூட்டம் நிறைவடைந்தது.