ஆதியும் நானே அந்தமும் நானே
ஜோதி ரசூலாய் நிலைத்திட்டேன் தானே
தன்னிலே தானாய் நின்றிட்ட நானே
நான் நீ அவனென்று தோற்றம் கொண்டேனே
தோற்றம் அனைத்தும் என் கற்பனைதானே
ஏற்றம் இறக்கமின்றி இலங்கி நின்றேனே
இல்லாத நிலையில் இருக்கின்ற நானே
ஏறியும் இறங்கியும் இயங்குகின்றேனே
எந்தனுக்கே எந்தன் அறிவு என்னைப்பற்றி சொன்ன பின்னே
எந்தன் அறிவே எந்தனுக்கே ஏன் அறிய தடையாய் உள்ளது?
ஓ, எந்தன் அறிவும் அறியாமையும்
என்னிடத்தில் ஒன்றுதானே
எந்தன் அறிவே குருத்துவமாய்
எந்தனுள்ளே இயங்கி நிற்பதால்
எந்தன் முழுமையும் அதற்கு கைக்கட்டி வாய்பொத்தி வணங்குகின்றதோ?
வாழ்த்தும் உரைக்கின்றதோ?
இன்னல்லாஹ வமலாயிக்கத்தஹு…..
கலீபா Adv..A.N.M.லியாகத்அலி B.sc.,B.L