Wednesday, December 1, 2010

ஒன்றித்த ஒன்று

என்றெனும் கண்டதுண்டோ
எங்கணும் கண்டதுண்டோ

தன்னையே தேடி தானே அலையும் ஒன்றினை
என்றெனும் கண்டதுண்டோ
எங்கணும் கண்டதுண்டோ

உள்ளதெல்லாம் ஒன்றேஎன்னும்
உண்மையை அறிந்தும்
தன்னையே தேடி தானே அலையும் ஒன்றினை
என்றெனும் கண்டதுண்டோ
எங்கணும் கண்டதுண்டோ

ஏதுமற்றானை எல்லாமாயுல்லானை
பேதமற்றானை பெயருமற்றானை
வேதம் கொண்டானை வேற்றுமையற்றானை
இல்லாதிருந்தானை இல்லைஎன்பதில்லானை
அருவாய் நிறைந்தானை திருவாய்விரிந்தானை
ஒன்றாய் நின்றானை ஒன்றித்தே உள்ளானை
என் பெயர் கொண்டு நான் அழைப்பெனோ
நான்
என் பெயர் கொண்டு நான் அழைப்பெனோ
லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
ஒன்றையன்றி ஒன்றுமில்லை
உள்ளதெல்லாம் அதுவேன்றோ
தன்னில் தானாய் உள்ள நிலையில்
காண்பதெல்லாம் தானன்றோ

-------கலிபா.வக்கீல் . A.N.M.லியாக்கத் அலி
மதுக்கூர்