ரசூல் (ஸல்) அவர்களுடய வாழ்வின் பயணம் முழுவதிலும் போற்றியவர்களையும் புழுதிவாரித் தூற்றியவர்களையும் நாம் நிறைய காண முடிகிறது. நிறைய நல்லவர்களும் கயவர்களும் அவர்களுடைய புனித வாழ்வின் பயணத்தில் வந்து போனார்கள். ரசூல் (ஸல்) அவர்களுக்கு துன்பம் கொடுத்தவர்கள் இறுதியில் அவர்களிடமே மன்னிப்புப் பெற்று நல்லவர்கள் ஆகி பிறகு நல்வாழ்வு வாழ்ந்தார்கள் என்றாலும் ரசூல் (ஸல்) அவர்கள் இவர்களால் அடைந்த துன்பம் அடைந்ததுதானே அது நடந்துவிட்ட ஒரு நிகழ்வுதானே. அவைகளால் அவர்கள் பட்ட காயங்கள் சுவடுகள்தானே. மன்னிக்கும் குணமோ ரசூல் (ஸல்) அவர்களுக்கு. மன்னிப்புப் பெற்றவர்களுக்கோ சுபிட்சம்.
ரசூல் (ஸல்) அவர்கள் மறைந்த பின்பும் பகை வுணர்வு மிகைத்தவர்கள், ஹசனார் ஹுசைனார் (ரலி)போன்ற அவர்களின் புனித வாரிசுகளை , பகை உணர்வால் தொடர்ந்தவர்கள் பணம் பதவி என்று இவர்களாகவே குற்றம் சொல்லி அவர்களை சிதைத்தார்கள். ஆனால் வரலாறு உண்மையை தெளிவாக்கிக் காட்டியது. உண்மையை உரித்து வைத்தது. கயவர்களை அடையாளம் காட்டியது.
இன்றும் பகை உணர்வு கொண்டவர்கள் தீய எண்ணங்களால் ரசூல் (ஸல்) அவர்களின் வாரிசுகளை குறிவைத்துத தொடர்கிறார்கள்.
மிகுந்த கண்ணியத்திற்கும், மேன்மைக்கும் உரிய எங்கள் ஷெய்கு நாயகம் அவர்களை தகாத சொற்களால் வசனிக்கத் தொடங்கி உள்ளார்கள். அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்ப்படுத்த முனைகிறார்கள்.
அன்று அறேபியாவில், எங்கோ போன ஒருவரை மக்கள் போற்றவில்லை. அல்லாஹ்வால் அடையாளம் காட்டப்பட்ட ஒரு புனிதரைத் தான் மக்கள் நபி என்று போற்றினார்கள். திருக்குர் ஆன் அதற்க்கு சாட்சியாக நின்றது.
இன்றும் நாங்கள் எங்கோ போகின்ற ஒருவரை போற்றவில்லை. ரசூல் (ஸல்) அவர்களின் புனித வாரிசாகவும், காமில் செய்காகவும் திகழ்கின்ற ஒரு மகானையே சந்தேகமின்றி நாங்கள் போற்றுகிறோம்.
அவர்களின் அரிய படைப்புக்களே அதற்க்கு சாட்சி. அவர்களின் கண்ணிய போதனைகள் அதற்க்கு சாட்சியாய் நிற்கிறது அவர்களி ன் புனித படைப்புக்கள் போன்றவற்றில் அதைப்போன்ற ஏதேனும் ஒரு வரியேனும் இவர்களால் இயற்ற முடியுமா? முடியாது என்பதை அறிந்தவர்கள் கள்வன் கொல்லைப் புறமாக வருவது போன்று, இவர்கள் சிந்தையில் தோன்றும்
நாற்ற வார்த்தைகளாலும், பணம் பதவி என்றும் குற்றம் சுமத்தப் பார்க்கிறார்கள். வரலாறு இதையும் பதியும், இவர்களின் பிற்காலங்களையும் பதியும்.
அன்று ஒரு கவிஞர் ரசூல் (ஸல்) அவர்களை தகாத வார்த்தைகளால் கவி பாடினார். பின்பு ரசூல் (ஸல்) அவர்களின் மேன்மையை அறிந்தார், தம் கவிகளால் புகழ் பாடினார். "நல்ல மரம் கல்லடி படும்" என்பார்கள்.
கல்லால் அடிப்பவனே அதன் கனிகளையும் உண்பான்.
காயம் பட்ட அந்த நல்ல மரம் கனியே கொடுக்கும் அல்லாது அதன் பணியை அது நிறுத்தாது.
சிராஜ் - துபை
தூற்றுகின்றவனே! உன்னை ஒருகனம் சிந்தித்துப் பார்? சகதியில் கிடந்த உன்னை மனிதனாக மாற்றியது யார்?
மனிதத்தன்மையோடு வாழ வேண்டிய நீ பணம் எனும் மனம்நோய் பிடித்து மீண்டும் சகதியில் துர்நாற்றம் எடுத்து நீசனாகிவிட்டாயே!
அமைதியாக வாழ வேண்டிய நீ அடிமாடாகி விட்டாயே!
தாயின் மார்பில் பாலருந்திவிட்டு அந்த மார்பகத்தையே அறுப்பதற்கு துணியும் உன்னை இந்த சமுதாயம் என்ன செய்யும்?