Monday, November 29, 2010

ஞானம் சன்னிதானம்

ராகம்: பூவில் வண்டு கூடும் கண்டு......

ஞானம் என்னும் தானம் த‌ந்த‌
கோநின் ச‌ன்னிதான‌ம்

அற்புத‌ம் நாடாத‌ போதும்
சொற்ப‌த‌ம் கொண்டாட‌க் கூடும்
பொற்ப‌த‌ம் தான் நாடுவோர்க்கு
க‌ற்ப‌தே அற்புத‌மாகும்

நாடும் எந்த நாடும் - இன்ப‌
ஞான‌த் தென்றலாடும்!
தேடும் தீங்கு யாவும்
அண்டிடாமல் அஞ்சியோடும்!
பாடும் போற்றி ஓதும் இந்த
காலம் நம்மை ஆழும்!

போற்றுங் கூட்டம் யாவும் - என்றும்
ஏகம் மாலை தூவும்
காற்றில் ஆடும் நீர்போல் - உயிர்
மேகம் நாளும் மேவும்

போதும் என்றபோதும்
நின்றிடாது தந்த வானம்!
வேதம் சொன்ன போதம்
எங்கும் ஓங்கும் சங்கநாதம்!
நீதம் நின்று ஓதும் எந்த‌
நாளும் தங்கள் நாமம்!

நேற்றுக் கொண்டகோலம்
என்றும் மாறும் வர்ணஜாலம்-
ஏற்றம் கொண்டுச் சேர்க்கும் எம்
தூதர் தந்த பாலம்

-அமீர்அலி