Saturday, October 10, 2009
புதுப்பொலிவுடன் உதயதின விழா
துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை சங்கைமிகு செய்கு நாயகம் இமாம் அஸ்சையிது கலீல்அவ்ன் அவர்களின் 74 வது உதய தின விழா புதுப் பொலிவுடன் கொண்டாடப்பட்டது.
காலை 9.00 மணிக்கு புர்தா ஓதப்பட்டது. இன் நிகழ்ச்சிக்கு பின் காலை 10.00 மணிக்கு விழா ஆரம்பமானது.
இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர். இவ்விழாவின் தலைவராக
A.P.சஹாபுதீன் BE M.B.A அவர்கள்.
விழா ஆரம்பமாக ஆலிம் அப்துல் கரீம் அலிதாவி அவர்கள்
கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள்.
கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலாவுதீன்
"ஹ_வல் வுஜூது" பாடலை பாடினார்.
மதுக்கூர் பாடகர் முஹம்மது தாவூது B.COM அவர்கள் "மாநபியின் மாணிக்கமே வரவேண்டும்" என்ற பாடலை பாடினார்.
மதுக்கூர் பாடகர் சிராஜ்தீன் B.COM அவர்கள்
"குத்துபியத்தின் பெருமையுடன்" என்ற பாடலைப் பாடினார்.
பாடல்களுக்கு பின் தலைவர் A.P.சஹாபுதீன் BE. M.B.A அவர்கள் உரை நிகழ்த்தினார்.
சங்கைமிகு செய்குனா அவர்களின் பிறப்பு, அவர்கள் வளர்ந்தவிதம், அவர்களின் கல்வி, அவர்கள் தங்களின் தந்தை நாயகத்திடம் படித்த ஞானம், அவர்களின் பண்பு, அவர்களின் அன்பு, அவர்களின் பாசம், அவர்களின் கருணை, அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உபதேசங்கள், அவர்களின் வாழ்க்கைசரிதையை மிகஅழகாக எளிமையாக எடுத்துரைத்தார்.
இகக்கல்வியை கற்ற அறிஞர்கள் தங்களிடமுள்ள பெருமை, பொறாமை, நயவஞ்சகத்தன்மை இவைகளை அழிக்காமல் ஏகத்துவ மெய்ஞ்ஞானத்தை அறிந்திட முடியாது என்று சங்கைக்குரிய செய்குனா விளக்கிய சரித்திர சம்பவத்தை மீட்டுரைத்தார்.
இவரைத் தொடர்ந்து கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் தன்னுடைய அனுபவங்களை தன் செய்கு நாயகத்திடமிருந்து தான் பெற்றுக் கொண்டிருக்கும் பேரின்;பங்களையும். இந்த ஜமானுக்கு குத்புல் திலகமாக நமது ஆருயிர் செய்குனாதான் விளங்குகிறார்கள் என்று கூறினார்.
அடுத்து அதிராம்பட்டினம் S. ஷர்புத்தீன் D.COM உரையில்
கடந்த மாதம் செய்குனா அவர்களின் திரு இல்லத்திற்கு சென்று வந்த செய்தியும் அங்கு தங்கிருந்த அனுபவங்களையும் செய்குனா உபதேசித்த ஞானங்களைப் பற்றியும் கூறினார்.
பெருமானார் (ஸல்)அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை போதித்து பூர்த்தி செய்தார்கள் ஆனால் இதற்கு இந்த மக்களிடமிருந்து என்ன பிரதிஉபகாரம் கேட்டார்கள் என்றால் தன்னுடைய திருகுடும்பத்தை (அஹ்லுல்பைத்)நேசிக்க சொன்னார்கள்என்று அல்லாஹ் தனது மறையில் கூறுகிறான் என்றும்
இன்றைய காலத்தில் மாபெரும் செய்குவாக குத்புஸ்ஜமானாக நமது ஆருயிர் செய்குனா விளங்குகிறார்கள். இவர்களின் சிறப்பு என்னவென்றால் ரசூல் ஸல்லாலாஹ_ அலைஹிவஸல்லாம் அவர்களின் திருப்பேரராக விளங்குகிறார்கள் என்றும்
சமீபத்தில் பாக்கிஸ்தான் கராச்சி நகரத்தில் அஹ்லுல்பைத் திருக்குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் கூறினார்.
அடுத்து கீழக்கரை காதர் சாஹிப் M.B.A அவர்கள் பேசுகையில்
நான் இந்த ஞானசபைக்கு வரவில்லை எனில் என்னுடைய வாழ்க்கை மிகவும் கைசேதப்பட்டிருக்கும் என்றும் இங்கு வந்ததினால் தன்னுடைய வாழ்க்கையில் எழில் பொங்குவதையும் தன்னுடைய பணியில் தலைசிறந்து விளங்குவதின் காரணத்தையும் தனக்கே உரித்தான கவித்தோனியில் அடுக்கு மொழியுடன் மிகஅழகாக பேசினார்.
அவரைத்தொடர்ந்து கிளியனூர் M.S.முஹம்மது சபீர் M.B.A அவர்கள் பேசுகையில் பத்தாண்டுக்குப்பின் இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்று ஆரம்பித்து இன்றையக் காலக்கட்டத்தில் ஞானவிசயங்களை முதலில் நம்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நாம் போதிக்கவேண்டும். இன்றைய உலகம் இளைஞர்களை இன்டெர்நெட்டின்பால் கவனத்தை மிகஅதிகமாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது. பலரும் சேட்டிங் பேஸ்புக் என்று தங்களுடைய நேரங்களை அதில் சிலவுசெய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்கு நாம் நம்முடைய மீடியாவை இணையதளத்தின் பக்கம் திருப்பவேண்டும் என்று எழுச்சியான உரை நிகழ்த்தினார்.
இவரைத் தொடர்ந்து கடையநல்லூர் அப்துல்காதிர் (இளவரசன்) அவர்கள் செய்குனா அவர்களைப்பற்றி நீளமான கவிதையை கம்பீரகுரலுடன் வாசித்தார்.
அவரைத் தொடந்து கிளியனூர் இஸ்மத் பேசினார்.
பிறந்தநாள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் அவசியத்திற்குரிய நாளாக இருக்கிறது.
பள்ளியில் கல்லூரியில் அரசுநிறுவனங்களின் ரேசன் கார்டு போன்றவற்றிற்காகவும் வேலை வெளிநாடு பாஸ்போர்ட் போன்ற அனைத்திற்கும் தன்னுடைய பிறந்த தினத்தை நினைவுப்படுத்தப்படுகிறது. பிறந்த தேதியை மட்டும் நினைவு படுத்தக்கூடியவர்களால் இந்த சமூகத்தில் எந்த மாற்றமுமில்லை ஆனால் சமூகத்தில் மாற்றங்களை நிகழ்த்தியவர்களுக்கு இந்த சமூகத்தில் சிலர் பிறந்தநாள் கொண்டாடாமல் இருந்ததில்லை.
பெருமானார் (ஸல்)அவர்களின் பிறந்தநாளையும் மகான்களின் பிறந்தநாளையும் கொண்டாடுவது தரீக்காவாதிகள் தனக்காக தானே பிறந்தநாளை கொண்டாடுபவர் அரசியல்வாதி.என்றும் செய்குவிடம் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். சிலருடைய வாழ்க்கையில் நம்பிக்கையுடன் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.
அடுத்து திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா B.SC அவர்கள் உரைநிகழ்த்துகையில்
அல்லாஹ் ஏழுவானத்திற்கு மேல் இருப்பதாக சிலரும் அர்ஷில் மட்டும் இருப்பதாக சிலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நன்மையான விசயத்திற்குமட்டும் தான் இறைவன் அதே ஒரு கஸ்டம் வந்தால் அந்த இறைவனை மறந்துவிடுவதுமாக இருக்கிறார்கள். அன்றை காலத்தில் இலக்கியங்களில் எங்கும் நிறைந்தவன் இறைவன் என்று தெளிவாக இறையைப்பற்றிய உண்மைகளை ஞானங்களை அறபு இலக்கியங்கள் தெளிவுப்படுத்தியது. அது காலப்போக்கில் அந்த இலக்கியங்களை மறைத்துவிட்டு இறைவனை ஏழுவானங்களுக்கு மேல் உயர்திவிட்டார்கள்.
எங்கும் நிறைந்த இறைவனை அனைத்திலும் அனைத்துமாய் நிறைந்த இறைவனை விளங்கவைத்துக் கொண்டிருப்பதுதான் இந்த ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை.
ஆரம்பக்காலத்தில் அணுவில் ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பின் அணுவைப்பிளந்தால் அதில் ஒரு சக்தி இருக்கிறது என்று அறிந்தார்கள். இப்படி ஒவ்வொன்றிலும் இறைவனுடைய சக்தி இருப்பதை விஞ்ஞானம் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறது என்று பேசினார்கள்.
இவர்களைத் தொடர்ந்து அப்பாஸ் ஷாஜகான் B.SC அவர்கள்
பேசுகையில் செய்குனாவின் மேன்மைகளையும் அவர்களின் திருக்குடும்பத்தார் கராமத் நிறைந்தவர்கள் என்றும் செய்குனாவின் மூத்தசகோதரர் அவர்கள் சிறுவயதில் செய்த கரமத் சம்பவங்களை எடுத்துக்கூறினார்.
இவரை அடுத்து தீன் இசைமுரசு தேரிழந்தூர் தாஜ்தீன் அவர்கள் தங்களின் இனிமையான குரலில் பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றிய பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
அடுத்து மதுக்கூர் A.N.M.முஹம்மது யூசுப் M.A அவர்கள் பேசுகையில்
நமது செய்குனா அவர்கள் நமக்கு இறைவனைப்பற்றி விளக்கத்தை அறியத்தருகிறார்கள். நாம் தாயின் கருவறைக்கு முன் எங்கிருந்தோம் தந்தையின் முதுகந்தண்டிலே இருந்தோம் அதற்குமுன் உணவு பண்டங்களிலிருந்தோம் அதற்கு முன் பஞ்ச பூதங்களிலிருந்தோம் அதற்குமுன் இறைவனுடைய அமாவாக இருந்தோம் என்றும்
மற்ற தரீக்காவில் இருந்த சிலர் நமது செய்குனாவிடம் பைஅத் பெறவந்தபோது அவர்களை ஏற்கனவே பைஅத் பெற்ற தரீக்காவிலேயே இருக்கும்மாறு பணித்தார்கள் என்றும் மாற்று சமயத்து சகோதரர்கள் ஆர்வத்துடன் நமது செய்குனா அவர்களை அனுகிறார்கள் அவர்களின் ஞான உபதேசங்களை கேட்டு அவர்கள் மதம்மாறுவதற்கும் சிலர் கேட்டபோது இந்த உண்மைகளை விளங்கிக்கொள்ளுங்கள் மதம்மாற்றம் தேவைஇல்லை உங்களுக்கு மனம்மாற்றம்தான் தேவை ஞானம் உங்கள் மதங்களிலும் இருக்கிறது என்று கூறினார்கள் என்று சில நிகழ்ச்சிகளை கூறினார்.
இறுதியாக துவா சலவாத்துடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பைஜி தரீக்காவிலிருந்து ஆலிம் சபியுல்லாஹ் ஜமாலி அவர்களும் ஆலிம் அப்துல்கரீம் அல்தாவி அவர்களும் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.
இன் நிகழ்ச்சிக்கு அலங்காரங்கள் செய்து அழகுபடுத்தியவர்கள் இக்பர் ஷாஜகான் அபுல்பசர் திருச்சி சாதிக் முஹம்மது அலி ஆசிக் அப்துல்ரஹ்மானின் மகனார் அமீர்அலி ஜாகிர்உசேன் ரியாஸ்அஹமது மற்றும் அறை நண்பர்கள்.
ஜூம்மா தொழுகைக்கு பின் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு புகைப்படங்கள் எடுத்தவர்கள்.
மதுக்கூர் ராஜாமுஹம்மது
அதிரை அப்துல்ரஹ்மான்
மதுக்கூர் சாதிக்
மற்றும் பலர்.
அபுதாயிலிருந்து ஜெகபர் சாதிக், கிளியனூர் பத்தாஹ் மற்றும் வழுத்தூர் அப்துல்ரசீது, ஆதம் அப்துல்குத்தூஸ் ,அப்துல்ரவூப் ,ஹாஜாஅலாவுதீன், அன்வர்உசேன், வாவாமுஹம்மது, பஷீருல்லாஹ், ஜெய்னுலஆபுதீன், அப்துல்ஹக், மன்னார்குடி முஹம்மது தாவூது , ஷேக்முஹைத்தீன், ஜெகபர்தீன்,கவிஞர் நாசர், சாகுல்ஹமீது மற்றும் அமீரகத்திலிருந்து பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி…!