அக்டோபர் 4 ம் தேதி இலங்கை வெலிகமையில் ஷவ்வால் பிறை 16 மாலை இமாம் அஸ்சையது கலீல் அவ்ன் அவர்களின் பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிரா அத் ஒதப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றிய புகழ்பாடல் பாடப்பட்டது.
வரவேற்புரை சபீர் அவர்கள் நிகழ்த்தினார்
சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் மௌலானா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
மௌலவி ஹரீல் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவரைத்தொடந்து நூருதீன் அவர்களும் கலீபா அவர்களும் உரைநிகழ்த்தினார் இறுதியாக இமாம் அஸ்சையது கலீல் அவ்ன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.
இன் நிகழ்ச்சியில் இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் அவர்களும், அஸ்சையது யாசீன் மௌலானா அவர்களும், பிஸ்ரின் மௌலானா அவர்களும் ,கலீபா அவர்களும் மற்றும் அனைத்து முரீதீன்களும் கலந்து சிறப்பித்தார்கள்.