Saturday, October 3, 2009

இராத்தீபும் கஸிதத்துல் அவுனியா நிகழ்வும்


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை துபாயில் பிறை 14 2.10.2009 வெள்ளிமாலை மஃஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.
அதன் பின் கஸிதத்துல் அவுனிய்யா ஓதப்பட்டது.

இன் நிகழ்ச்சிக்குப் பின் தலைவர் சஹாபுதீன் இராத்திபத்துல் காதிரியாவின் சிறப்புகளை சுறுக்கமாக தெளிவாக கூறினார்.

திருக்குர்ஆன் இறைவசனங்களைக் கொண்டு இராத்திபத்துல் காதிரியா தொகுக்கப்பட்டுள்ளது என்றும் இதை பிறை 14 ல் ஓதிவருவதைக் கொண்டு நமது உடல் மனம் தூய்மை பெறுகிறது. மனதில் நிய்யத் வைத்து ஓதிவருபவர்களுக்கு அல்லாஹ்த்தால அந்த நிய்யத்தை நிவர்த்தி செய்து வருகிறான். என்றுநடந்த ஒரு சில சம்பவங்களையும் எடுத்துக் கூறினார்.இந்த இராத்திபத்துல் காதிரியாவை ஏற்படுத்தி அதை தொகுத்து தந்தவர்கள் பெரிய நாயகம் என்றழைக்கப்படும் அஸ்சைய்யது யாசீன் மௌலானாஅவர்கள்.
அவரைத் தொடர்ந்து திருச்சி சாதிக் உரையாற்றினார்.

அவருடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
பெருமானாரின் திருகுடும்பத்தினர் மீது நாம் எந்தகாலக்கட்டத்திலும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கவேண்டும்.இன்றைய காலத்தில் சிலர் பெருமானாரின் திருகுடும்பத்தினர் மீது அவமரியாதை கூறுவது புதிதான ஒரு விசயமல்ல. பெருமானார் (ஸல்)அவர்களின் காலத்திலிருந்தே அவமரியாதை செய்யும் புல்லுருவிகள் இருந்துக் கொண்டு தொடர்ந்து கொண்டுதான் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களின்
வாழ்க்கைதரழும் மிகக்கேவளமானதாகவே இருக்கும் என்று தன் அனுபவங்களை கூறினார்.
பாடகர் தாவுது அவர்கள் பாடலைப்பாடி பின் சலவாத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இன் நிகழ்ச்சியில் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

புகைப்படங்கள் - மதுக்கூர் ராஜாமுஹம்மது.