காலையில் மிகத் தெளிந்த மனதோடு அலுவலகம் சென்றேன்.மனம் உற்சாகமாய்இருந்தது. இன்று இதைச் செய்யவேண்டும் அதைச் செய்யவேண்டும். இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று மனம் அழகாய்ச் சொல்லிக்கொண்டிருந்தது. அலுவலகம் சென்றடைந்து நேரம் ஆகிக்கொண்டிருந்தது. நாம் நினைத்து இயங்கிக்கொண்டிருந்தது ஒன்றாய், இடையிடையே வரும் குறுக்கீடுகள் வேறொன்றாய் இருந்தது. மனம் இடைஞ்சல் பட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே மனம் காயப்பட்டது. காலையில் இருந்த சந்தோசம் மறைந்து காயமும் சோகமும் புகுந்தது. இதனால் மனம் சோர்வடைய ஆரம்பித்து முடிவாய் களைத்துப்போய் உற்சாகமிழந்து திரும்பியது காலையில் தெளிந்த மனம், மாலையில் குழம்பிப்போனது. இப்படித்தான்.........
இவ்வுலகில் பிறக்கும்போது தெளிந்த நிலையோடு வரும் நாம், காலப்போக்கில்இவ்வுலகில் பயின்று வளரும்போது அல்லல்பட நேரிடுவதால் மனம் கெட்டுநிம்மதியிழக்க நேரிடுகிறது. முடிவில் மனம் படுகாயத்தோடும் சோர்வோடும் ஒளியிழந்த நிலையிலும் ஆகிவிடுகிறது. மரணம் நிகழும் வரையிலும் கண்டதும் மனதில் புகுந்து ஆட்டுவிக்கிறது. இதிலிருந்தெல்லாம் விடுபட்டு தப்பித்து வாழ்வின் பயணம் தொடர, சரியான திசையில் நம்மை வழிகாட்டுதல் வாழ்விற்குஅவசியம்.
பிறந்ததும் தாய் தந்தையர், பின்பு கல்விசாலையில் ஆசான், பின்பு சத்தியப் பாதையைநேர்வழிகாட்டும் மற்றும் வாழ்வின் இரகசியங்களை காட்டித்தரும் ஞான குருமார்கள் என சரியான திசையில் நம் வாழ்வின் பயணத்தை அமைத்துக்கொண்டு தொடர்ந்தால்
இவற்றை நாம் வென்று விடலாம்.
வழிகாட்டும் குருமார்கள் நமக்கு அவசியம் என்பதை அறியாமலேயே மரணம்வரைசென்றடயும் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். மனமே உன்னைக் கெட்டு விடாது காக்கும் பொறுப்பை சரியான வழிகாட்டுதலின் பக்கம் விடுகிறேன்.
நீ அமைதியடைவாயாக.!!
-- M.A. சிராஜுதீன். துபை