Sunday, February 9, 2014

துபாயில் மீலாதுன்னபி பெருவிழா 2014

துபாய் அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஏற்பாட்டில் 34 ம் ஆண்டு மீலாதுன்னபி பெருவிழா நிகழ்ச்சி ஜனவரி 31 வெள்ளி மாலை 6.30 மணிக்கு துபாய் லேண்ட் மார்க் விடுதியில், கலீபா நிர்வாகத் தலைவர் A.P.சகாபுதீன் B.E. M.B.A ஹக்கியுல்காதிரி தலைமையில் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவின் துவக்கம் கிராஅத் ஓதி மௌலவி அப்துல்ஹமீது, துவங்கி வைக்க, அதைத் தொடர்ந்து ஹுவல் வுஜூத் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது பாட அதன் தமிழாக்கத்தை அபுல்பசர் வாசித்தார்.

நபிப்புகழ் பாடலை மதுக்கூர் ஹாஜாமுகைதீன் பாடினார்.
இணை பொதுச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் வரவேற்புரை நிகழ்த்த,

வாழ்த்துரை வழங்கினார்கள் சையதுஅலி மௌலானா, முஹிப்புல்உலமா முஹம்மது மஃரூப் கீழக்கரை மற்றும் மௌலவி முஹம்மதுஅலி பிலாலி.

இவர்களைத் தொடர்ந்து முஹம்மது ஹனீப் ரஜா காதிரி பீஜாப்பூர் தனது வசீகரமான குரலில் கண்மணி நாயகத்தை புகழ்ந்து பாடிய கஸிதா உருது பாடல்களும் பெங்களுருவைச் சார்ந்த முஹம்மது நபீல் பாடிய தமிழ் கஸிதா பாடல்களும் நிகழ்ச்சிக்கு வருகைத்தந்த கண்மணி நாயகத்தின் ஆசிக்கீன்களின் உள்ளத்தையெல்லாம் மகிழ்வித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

சிறப்பு சொற்பொழிவை மௌலவி அல்ஹாபிழ் S.M.S.ஹுசைன் மக்கீ மஹலரி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

நான்காம் ஆண்டாக மீலாதுன்னபி ஆன்லைன் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் அபுதாபி மௌலிது கமிட்டியிலிருந்தும், ஈமான் அமைப்பிலிருந்து S.M.பாரூக், காயிதேமில்லத் பேரவையிலிருந்து ஹமீதுரஹமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்லிருந்தும் மற்றும் சங்கமம் தொலைக்காட்சியிலிருந்து கலையன்பன் குத்தாலம் அசரப்அலி முகம்மது அனீபா மற்றும் மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் ரஹமத்துல்லா  இமாமுதீன் காயல்பட்டினம், லால்பேட்டை, நெடுங்குளம்,ஜமாஅத்தார்களும் பத்ரு சஹாபாக்கள் இல்லத்து நண்பர்களும் மற்றும் கண்மணி நாயகத்தின் ஆசிக்கீன்களும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் நூருல் அமீன், அதிரை அப்துல்ரகுமான், அகமது இம்தாதுல்லா ஆகியோர் ஆன்லைனில் நேரடி ஒளிப்பரப்பில் ஈடுபட்டனர்..

இவ்விழா ஏற்பாட்டை மதுக்கூர் ஹாதம் அப்துல்குத்தூஸ், அபுல்பசர், முகம்மது தாவூது, மதார்ஷா, சாகுல்ஹமீது, அதிரை ஷர்புதீன், O.P.U.பஷீர், கோட்டைகுப்பம் முகைதீன், அலிஅக்பர், மன்னை அப்துல் மாலிக்,பஷிருல்லா, அமீர்அலி, மதுக்கூர் அப்துல்ரகுமான், மன்னை ஷேக்தாவூது,இதயத்துல்லா, கிளியனூர் இஸ்மத் ஆகியோர் செய்தனர்.

 நிறைவாக நன்றி உரை நிகழ்த்தினார் மதுக்கூர் அமீர்அலி

 யா நபீ சலாம் அலைக்கும் யா ரசூல் ஸலாம் அலைக்கும் பைத்துடன் இனிதே இரவு 11.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. அனைவருக்கும் தப்ரூப் வழங்கப்பட்டது.
ஏகாந்தம் பாடலைப் பாடுபவர் முகம்மது தாவூது

வரவேற்புரை நிகழ்த்துவது கிளியனூர் இஸ்மத்
நபிப்புகழ் பாடல் ஹ◌ாஜா முகைதீன்
வாழ்த்துரை வழங்குவது கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா

ஆன்லைன் பதிவு அதிரை அப்துல்ரகுமான்
நபிப்புகழ் பாடலைப் பாடுபவர் அடமங்குடி அப்துல்ரகுமான்

வாழ்த்துரை குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் அப்துல்ஹமீது

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் ஆசிக்கீன்களை தனது வசீரகுரலில் உணர்வுடன் உருது கஸிதா பாடி அனைவரையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திய முஹம்மது ரஸா காதிரி பீஜாப்பூர்








வாழ்த்துரை வழங்குகிறார் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப்

தலைமை உரை நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் பி.இ. எம்.பி.ஏ







உருதிலும் தமிழிலும் சிறப்பான கஸிதாக்கள் பாடுகிறார் பெங்களுருவைச் சேர்ந்த முஹம்மது நபீல்











 கண்ணியமிக்க பாக்கர் சாஹிப் கீழக்கரை மேலாளர் ஈத்ஷெய்கு குழு
வாழ்த்துரை வழங்குகிறார் தக்கலை மௌலவி அவர்கள்
வாழ்த்துரை வழங்குவது மௌலவி முஹம்மது அலி பிலாலி
சிறப்பு சொற்பொழிவு அல்ஹ◌ாபில் எஸ்.எம்.எஸ்.உசேன் மக்கீ மலரி அவர்கள்













நினைவு பரிசு வழங்குகிறார்கள் கண்ணியமிக்க ஜாஹித்அலி மௌலானா
நினைவு பரிசு வழங்குகிறார்கள் கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா
நினைவு பரிசு வழங்குகிறார்கள் ஆபித்அலி மௌலானா
நினைவு பரிசு வழங்குகிறார்கள் ஜியாவுதீன் மௌலானா
ஆன்லைன் கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர்களை அறிவிக்கிறார்கள் கிளியனூர் இஸ்மத் & கலையன்பன் (முகம்மது ரபீக்)
அதிரை அப்துல்ரகுமான் ஆறுதல் பரிசளிக்கிறார்


மதுக்கூர் இமாமுதீனிடமிருந்து எஸ்.எம்.பாரூக் ஆறுதல் பரிசு பெறுகிறார்கள்.

கோட்டைக்குப்பம் முகைதீன் ஆறுதல் பரிசை வழங்குகிறார்
சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் ரஹமத்துல்லா ஆறுதல் பரிசை வழங்குகிறார்
ஆழியூர் அபுல்பஸர் ஆறுதல் பரிசை வழங்குகிறார்
ஆறுதல் பரிசை வழங்குகிறார் அபுதாபி ஜீபைர் பெறுவது ஜெஸிலா ரியாஸ்

மூன்றாம் பரிசு இரண்டு கிராம் தங்கம் பெறுவது
NAFIA SATHIQA SYED AHAMED NAZEER வேதாளை
பரிசு வழங்குவது அதன் ஸ்பான்ஸர்
மன்னார்குடி அப்துல்மாலிக் (வைத்தியர்)


இரண்டாம் பரிசு பெறுபவர்
A.FATHIMA NABEELA கோட்டாறு நாகர்கோயில்
பரிசு வழங்குவது
ஸ்பான்ஸர்
மதுக்கூர் முஹம்மது தாவூது
பட்டுக்கோட்டை மதார்ஷா
முதல் பரிசு பெறுபவர்
SYED MOHAMED காயல்பட்டினம்
பரிசு வழங்குவது
ஸ்பான்ஸர்
கலீபா ஏ.பி.சகாபுதீன் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைத் தலைவர் துபாய்
குவைத் சபைத் தலைவர் அப்துல்ஹமீது ஆறுதல் பரிசை வழங்குகிறார் பரிசு பெறுபவர்    காயல் ஷேக்சலாவுதீன்




நன்றி உரை நிகழ்த்துகிறார் மதுக்கூர் அமீர்அலி



ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய ஸ்பான்ஸர்ஸ்

கலீபா எ.பி.சகாபுதீன் திருமக்கோட்டை
முஹம்மது யாசீன் (சிட்டி டவர்) கூத்தாநல்லூர்
எம்.முஹம்மது தாவூது மதுக்கூர்
கே.மதார்ஷா பட்டுக்கோட்டை
ஏ.அப்துல்மாலிக் மன்னார்குடி
யு.ஹிதயத்துல்லா மதுக்கூர் 

அனைவருக்கும் மீலாது குழுவினர்கள் சார்பாக மிக்க நன்றி