Sunday, May 13, 2012

விசுவாசம் கொண்டவர்க்கு சோபனமே!!

அல்லாஹுத்தஆலா சொன்னான். கௌதுல் அஉளமே! நபிமார்கள், முர்ஸல்களல்லாத சில அடியார்கள் எனக்குளர். துன்யாவை (இகத்தை) உடயவர்களிலிருந்து, நரகத்தை உடயவர்களிலிருந்து, சுவர்க்கத்தை உடயவர்களிலிருந்து எவரும் சுவர்க்கத்தின் மலக்கான ரில்வானும், நரகத்தின் மலக்கான மாலிக்குமே அவர்களின் நிலைமைகளைஅறியமாட்டார்கள், காணமாட்டார்கள். நான் அவர்களை வெகுமதிக்காகவோ,வேதனைக்காகவோ, சுவர்க்கத்தின் ரம்பைகளுக்காகவோ, மாளிகைகளுக்காகவோ ஊழியர்களுக்காகவோ படைக்கவில்லை. அவர்களை அறியாதிருந்தாலும் அவர்களைக்கொண்டு விசுவாசங் கொண்டவர்களுக்கே சோபனம்.
         

விளக்கம்: நபிமார்கள் முர்ஸல்களைத் தவிர்ந்த ஒரு கூட்டத்தார் இறைவனுக்கு இருக்கிறார்கள். அவர்களுடைய நிலைமைகள் அல்லது தன்மைகள் எவராலும் அறிந்து கொள்ளமுடியாது. சுவர்க்கம் நரகங்களிலுள்ள ரில்வானும் மாலிக்குமே அறிந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய நிலைமைகள் மிகத்தெளிந்ததாகவும் மறைந்ததாகவுமுண்டு. மற்றவர் மத்தியில் அவர்களில் எந்த
வேறுபாடுமிருக்காது. மனிதர்களைப் போன்றே இருப்பார்கள். ஆனால் அவர்களின் சொல்,செயல், எண்ணங்களெல்லாம் மக்களைவிடமாற்றமானதாகவும்
பொதுமக்களால் அறிந்து கொள்ள முடியாத தன்மையுடயதாகவுமிருக்கும்,இவர்கள் உண்மைக்கு முரணாக நடக்க மாட்டார்கள். தேவயற்றவிடயங்களில்ஈடுபட மாட்டார்கள். அன்பு செறிந்தவர்களாயிருப்பர். நீதி, நீதம், நியாயம் இவர்களில்உண்டு. அவர்களுக்கு சுவர்க்கம்,நரகம் என்பதில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும், ரசூலையும் விரும்பியவர்கள். அவர்களின் வாழ்வெல்லாம்இறைவனை நம்பியதாகவே இருக்கும். சுவர்க்கம் நரகத்தைப் பற்றிய சிந்தனை அவர்களிளிருக்காது. இறையில் இரண்டறக் கலப்பதே அவர்களின் நோக்கம்.இறை நாடியதை அது செய்யும் எனும் நம்பிக்கையுடையவர்கள். அவர்கள் நன்மைதீமைக்காகவும் படைக்கப்படவில்லை. ஹூருல்ஈன்களுக்காகவும் படைக்கப்
படவில்லை. அவர்கள் இறைவனுக்காகவே படைக்கப்பட்டவர்கள். தானே தன்னில்தானான அதில் தன்னில் தானாய் மிளிர்கிறவர்கள். அவர்களில் நம்பிக்கை
வைத்தவர்களுக்கு அவர்கள் அவர்களை அறியாதிருந்தபோதும் சோபனமே.

          -முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் ரிஸாலாகௌதிய்யா                   நூலிலிருந்து....
          -மொழிபெயர்த்தவர்கள்: சங்கைமிகு யாஸீன் மௌலான (ரலி) அவர்கள்.

           -விளக்கம்: சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.

Thanks - sirajudeen