Friday, September 16, 2011

திருச்சியில் சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் 76 ஆவது உதய தின விழா!

நமது உயிரினும் மேலான சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களின் 76 புனித உதய தின விழா, திருச்சியில் ஆத்ம சகோதரர் ஜனாப். S.B. ஆரிப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவுக்கு கிப்லா ஹல்ரத். தமிழ்மாமணி. மௌலவி. N. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தலைமை தங்கி விழாவை நடத்தினார்கள்.

விழாவில் மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி முதல்வர். ஆத்ம சகோதரர் ஜனாப். மக்ஹ்தூம் ஜான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் மௌலவி. N. சயீத் முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், மௌலவி. N. முஹம்மது ரபீயுத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஆகியோர் சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் மேன்மை, உயர்ந்த படித்தரங்கள், எளிமை, இனிமை, எண்ணில்லா சிறப்புகள், வாப்பா நாயகமவர்கள் நமக்கு வழங்கி வரும் சிறப்புகள், நன்மைகள், பாதுகாவல்கள், நாம் வாப்பா நாயகம் அவர்களை எவ்வாறு விளங்கிகொள்வது, அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற உயரிய கருத்துக்களை வெகு நேர்த்தியாக எடுத்து வைத்தார்கள்.


விழாவில், திருச்சியை சேர்ந்த முரீது பிள்ளைகள், அஹ்பாபுகள், மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.

விழாவின் முத்தாய்ப்பாக, சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களின் வாரிதாத்துக்களான கசீததுல் அஹ்மதியா - கசீததுல் அவ்னிய்யா சிறப்பாக ஓதப்பட்டது.

இந்த புனித திரு நாளின் பொருட்டால் எல்லா வளங்களும் நலன்களும் எல்லாரும் பெற்று சிறப்புற்று வாழ ஏக மனதாக பிரார்த்திக்கப்பட்டது. நிறைவாக கந்தூரி உணவு உபசாரத்தோடு விழா இனிதே சிறப்பாக நிறைவு பெற்றது.

தகவல் : இளங்கவி. A. நைனார் முஹம்மது அன்சாரி , திருச்சி.