Tuesday, April 10, 2012

வரவேண்டும் வரம் தரவேண்டும் கலீல் நாதரே!

வரவேண்டும் வரவேண்டும் கலீல் நாதரே!
தரவேண்டும் தரவேண்டும் மலர் பாதமே
அறம் வேண்டும் திறன் வேண்டும் கலீல் நாதரே!
உம் அருள் வேண்டும் அடியாராய் வர
வரம் வேண்டினேன்!

பொன் தேடும் பொருள் தேடும் இவ்வுலகிலே
என்னில் எனைத்தேடும் சுரம் கொஞ்சம்
தரவேண்டினேன்!

நான் என்னும் அகங்காரம் அறியாமையே
என்னுள் அறியாமை இருள் போக்கி
தரவேண்டினேன்!

பொய்கூறி புறம்கூறி நோய் ஏற்றினேன்
உங்கள் மெய்யொளியால் அந்நோய் நீக்கி
தரவேண்டினேன்!

இறைஇட்ட மறை அதை (நான்) கற்ற முறை
எனை மாற்றவே
நான் கற்றவரை (அவை) முற்றும் (இணைவைக்கும்) திரை
உம் அருளால் அத்திரை நீக்கித் தரவேண்டினேன்!

நெஞ்சில் கொஞ்சம் ஊசலாட்டம் ஊடுறுவ தடுமாறினேன்
உறுதியான நம்பிக்கையில் உருமாறினேன்
பரவசமாய் இருந்திடவே நான் ஏங்கினேன்
பக்தியினால் பரம்பொருளை எங்கும் நான் காண்கிறேன்!

பட்டறிவு சுட்டறிவால் நான் மயங்கினேன்
உம் மெய்யறிவு பட்டதினால் அதை போக்கினேன்
ஜாதிமத ஏற்றதாழ்வால் நிதம் வாடினேன்
ஜோதி மய கலீல் அவ்னில் அதை போக்கினேன்.!


-மன்னார்குடி ஷேக்தாவூது ஹக்கியுல்காதிரி