Sunday, January 15, 2012

ஒரு நாளைக்கு ஒருமணிநேரமாவது.........

ரஸூல் (ஸல்) அவர்கள் தோன்றுமுன் மனிதர்களின் மோசமான நிலையை
எண்ணிப்பாருங்கள். மனிதன் தன் கையால் செய்த கல்லை அல்லது ஒரு பொருளை
சூரியனை,நெருப்பை தெய்வமாக நினைத்து வழிபட்டு வந்தான். அம்மனிதனுக்கு
அறிவே இல்லையா? மூளை இல்லையா? என நினைக்கும் அளவு மனிதனின்
நிலை படு மோசமாக இருந்தது.

ரஸூல் (ஸல்) அவர்கள் தோன்றி ஒரே இறைவன் தான் எனும் தவ்ஹீதப்
போதித்தார்கள். சிலைகளெல்லாம் பரிபூரண இறையல்ல எனக்கூறி சிலை
வணக்கத்தை ஒழித்தார்கள். "இறை" என்பது பலவற்றைக் குறிக்காது இறை
என்பது ஒன்றேயொன்றுதான். "லாஇலாஹ இல்லல்லாஹு" என்பதனை
அறிவுறுத்தவே, காட்டவே தான் ரஸூல் (ஸல்) அவர்கள் தோன்றினார்கள்.

இறை என்பது ஒன்று. அதுவே பரிபூரணம். எங்குமிருப்பதும் அந்த ஒன்றே.
ஒன்று என்பது ஒருவர் ஒருவராய், ஒன்று ஒன்றாய் இருப்பதல்ல. பூரணமாக
இருக்கக்கூடிய ஒன்று.

இறையை இந்த நிலையில் நீங்கள் அறிந்து ஆராய்ந்து வந்தால் உங்களையறியாத
பேரின்பத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். அந்தப் பேரின்பத்தை இரசிக்கக் கூடிய
இன்பமும் உண்டாகும்.

நீங்கள் அல்லாஹ்வை மறந்துவிடாதீர்கள். எப்படி அல்லாஹ்வை மறக்கவியலும்?
அனைத்தும் அவனாக இருக்கும்போது அப்பேரிறையை நாம் எப்படி மறக்கவியலும்?

எனவே ஒருநாளைக்கு ஒரு மணிநேரமாவது அல்லாஹ்வைப் பற்றி சிந்தனை
செய்யுங்கள்.

பர்ளான கடமைகளைக் கண்டிப்பாக செய்து வாருங்கள். தொழுங்கள், நோன்பு வையுங்கள்
ஜகாத் கொடுங்கள். வசதி படைத்தவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லுங்கள். அங்கு
ரஸூல் (ஸல்) அவர்களைத் தரிசித்து "யா ரசூலுல்லாஹ் எங்களை மனிதனாக
வாழவைத்தீர்களே..நாங்கள் உங்கள் அடிமைகள்" எனப் போற்றிப் புகழுங்கள்.

---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.
Thanks - sirajudeen