"முத்தான வேதம் காண் முஹம்மது வேதம்
முன்னுதித்து பின் பிறந்தார் முஹம்மதென்பார்"
இவ்வரிகள் போகர் எனும் ஞானியாரின் "போகர் பன்னீராயிரம்" எனும் நூலில்
காணக்கிடைக்கிறது,
நமது கண்மணி நாயகத்தின் தாற்பரியத்தினை உணர்ந்தமயாலே அவர் இவ்வாறு
பாடியுள்ளார்.
சத்தியத்தின் புறமே சார்ந்து நிற்கும் ஞானியாருக்கு மதம்தான் ஏது?
நிறமற்ற நீருக்கும் நிறம்தான் ஏது?.
'ஆதம் (அலை) அவர்கள் மண்ணுக்கும் நீருக்கும் இடையே இருக்கும்போதே
நான் நபியாக இருந்தேன்' ---எனும் நபிமொழிக்கும்
'அன மின் நூரில்லாஹ்.........நான் இறைவனுடைய ஒளியில் நின்றும்
சகலமும் என்னுடைய ஒளியில் நின்றும்' ---எனும் நபிமொழிக்கும்
ஒத்ததாக போகரின் வரிகள்...
'முன்னுதித்து பின் பிறந்தார் முஹம்மதென்பார்' என அழகாக
இறைவன் சகலத்தையும் படைப்பதற்கு முன் முஹம்மது (ஸல்)
அவர்களின் நூரையே முதலில் படைத்தான் என்பதை அறிந்து
கூறியுள்ளார்.
சத்தியத்தை சத்தியமாக எடுத்துரைப்பதே ஞானியாரின் தன்மை
என்பதற்கு இதுவும் ஓர் சான்று.
M.A. சிராஜுதீன்.
துபை