Friday, January 6, 2012

இயற்கை கொண்டாடிய மீலாது!!!

பெருமானார் அவர்களின் நபித்துவத்தை முன்னறிவிக்கிறதாலும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலும் தெளித்தெடுக்கப்பட்டவர் என்பதைஅறிவிக்கிறதாலும், பெருமானார் அவர்கள் பிறந்தபோது மறைவான நூதனங்களும் வழக்கறுந்த புதுமைகளும் வெளியாயின.

வானம் பாதுகாப்பை அதிகப்படுத்தியது. முரட்டு ஜின்களும் சைத்தான் தன்மையுடையஆத்மாக்களும் வானத்தை விட்டும் தடுக்கப்பட்டன.

மேலே எழும் நிலைமையிலிருந்த சபிக்கப்பட்டவைகள் அனைத்தையும், பிரகாசிக்கிறஎறிகற்கள் எறிந்து கொன்றன.

அழகுதாரகைகள் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்காக (உயர்வான்மீது)தொங்கிக்கொண்டிருந்தன.

அந்நட்சத்திரங்களின் ஒளிவினால் ஹரத்தின் பள்ளத்தாக்குகளும் மேட்டு நிலங்களும் பிரகாசித்தன.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுடனே ஒரு ஜோதி வெளியாயது.சாம் தேசச் சக்கரவருத்தி கைஸரின் சாமிலுள்ள மாளிகைகள் அவர்களுக்காகப்(ரஸூலுல்லாஹ்வுக்காக)பிரகாசித்தன.

மக்காவின் பள்ளத்தாக்கிலுள்ள ஊர்களிலும் செல்வ வதிவிடங்களிலும் உள்ளவர்கள்எவர்களோ அவர்களெல்லாம் அந்த மாளிகைகளை (அந்தப் பிரகாசத்தில்)பார்த்தார்கள்.

அந்தப் பாரசீகச் சக்கரவர்த்தி கிஸ்ராவின் பட்டணத்திலிருந்த கோட்டை உடைந்த்தது.அக்கோட்டையின் மேல்தலத்தை உயர்த்தி அதைச் சரி பண்ணினார் அநூஷர்வான்என்பார்.

உயர்ந்த வீட்டு முன்மாடி (உப்பரிகை)களினின்றும் பதினான்கு மாடிகள் (கீழே)விழுந்தன.

அதனைத்தொட்ட துரதிருஷ்டத்தால் ஏற்பட்ட திடுக்கத்தினிமித்தம் கிஸ்ராவின்அரசு முறியடிக்கப்பட்டது.

பிரகாசிக்கிற அந்தச் சந்திரன் (நாயகம்) உதித்ததனாலும் அதன் உய்ப்பிக்கும் வதன உதயத்தினாலும் பாரசீக அரசாங்கங்களிலே வணங்கப்பட்டு வந்த நெருப்புஅணைந்தது.

ஹமாதானுக்கும் அறபியல்லாத ஊர்களினின்றுமுள்ள ஊரான கும்முக்கும் இடையிலிருந்த ஸாவாவின் ஏரி நீர் வற்றியது.

அந்த நீரூற்றுகள் ஒடுகிறமையால் அதன் அலை வீட்டுக் கூரைகளையும் வீடுகளையும்போதுமானவரை ஒழுகவும் நனையவும் வைத்து ஈரமாகும்வரை, நதிகளும் ஊர்களும்அன்று காய்ந்து வரட்சியடைந்திருந்தன.

குறிப்பு:(இதற்குமுன் வரண்டிருந்த ஆறுகளும் ஊர்களும் நபிகள் நாயகம் அவர்கள்பிறந்தபோது பெருவெள்ளத்தால் நனைந்து செழிப்புற்றன).

ஸமாவா என்னும் ஊரிலே உள்ள சிற்றாறு வழிந்து நிறைந்தோடியது. அவ்வூர்காடு, கரைகளிலே உள்ள செழிநிலமாகும்.

தாகிக்குத் தாகம் தீர்க்கும் கொடையாக (நாயகம் பிறப்பதற்கு) முன்னால் அந்தச்சிற்றூரிலே நீர் இருக்கவில்லை.

மக்காவிலே உள்ள இராஸ் (மைதானம்) என்று பிரபலமான இடத்திலே

ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பிறந்த இடம் இருந்தது.
நாயகம் அவர்கள் பிறந்த அந்த ஊரிலே உள்ள மரம் வெட்டப்படுவதில்லை.
அதன் பச்சையிலைக் கொப்புகளும் வெட்டப்படுவதில்லை.

உறுதியான சொற்படி, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்
திங்கட்கிழமை காலைக்குச் சற்று முன்பு, ரபீஉல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் நாள்,ஹரம் சரீபை விட்டும் அல்லாஹ் யானைப்படயைத் தடுத்து அதைக் காப்பாற்றியஅந்த ஆலமுல் பீல் எனும் யானை வருடம் பிறந்தார்கள்.

---பர்ஸன்ஜி மவ்லித் நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து....

மொழிபெர்யர்த்தவர்கள் : சங்கைமிகு ஷெய்ஹு நாயகம் அவர்கள்.
Thanks - sirajdeen