வஹ்ஹாபிகளின் குணம்; ஏதாவதொரு நல்ல விஷயத்தைக் கூறினால் அது குர்ஆனில் இருக்கிறதா? ஹதீதில் இருக்கிறதா? எனக் கேட்பார்கள்.குர்ஆனில் இருக்கிறது இதோ பாருங்கள் என்றால் அது நீங்கள் சொல்லக்கூடிய கருத்தல்ல என்பார்கள்.
ஹதீதைச் சொன்னால் அது "மவ்ளுஉ" எனக் கூறிவிடுவார்கள். அது சஹீஹானதுஅல்ல சரியானது அல்ல எனக் கூறிவிடுவார்கள். அல்லது தேவையில்லை என்பார்கள். அல்லது நீங்கள் சொல்லக்கூடிய கருத்து இந்த இடத்திற்கு பொருந்தாது எனக் கூறிவிடுவார்கள்.
உண்மையிலேயே பொருத்தமான கருத்தாகவிருந்தாலும் ஏற்கமாட்டார்கள்.ரஸூல் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கூறினால் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பொருந்தவே பொருந்தாது எனக் கூறக் கூடிய "தகுதி" இவர்களுக்கு எப்படி வந்தது?
சீடர்களில் சிலர் அறிவீனமானவர்களாகவும் உள்ளனர். இவர்களை அறிவு சிதைவுற்றவர்கள்எனக் கூறலாம். அதனாலேதான் தாயிடம் துஆக்கேட்டால் போதுமென்பர். தகப்பனுக்குமரியாதை செய்யமாட்டார்கள். அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்டால் போதுமென்பார்கள்.இவ்வாறு இவர்கள் பெரிய மேதைகளாகி விடுவார்கள். பார்த்தால் அது தலைக்கனம் தான் வேறொன்றுமில்லை.
---சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.
Thanks - Sirajudeen