Thursday, October 6, 2011

பொறாமை எனும் நஞ்சு

எங்கும் எவ்விடத்து பார்ப்பினும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தும் தன்னை சிறிது சிறிதாக அழித்து வரும் பேரழிவை கொடுக்கும் பொறாமை என்னும் நஞ்சு பதிந்துள்ளது.

இந்த பொறாமை மனத்துட் பதுங்கி கிடக்க முடியாது மேலிடும்போது இடத்தையோ நேரத்தையோ சிறிதும் கவனிக்காது குத்துவேன், வெட்டுவேன், கிழிப்பேன், அறுப்பேன் எனும் இழிவான சுலோகங்கள் வாயிலிருந்து
வெளியாகின்றன; எப்போதும் கொடிய எண்ணங்களுடைய நீசர்களுக்கே இத்தகைய கொடிய வார்த்தைகள்வெளிவருவதுண்டு.
நல்லவர்கள் வாயிலே நல்லவையே வெளியாகும் மற்றவன் மீது பொறாமை படுவதனால் பொறாமை படுபவனே இழிவுபட்டு அழிவு படும் நிலைமை உண்டாகிறது.

சிலர் நல்லவர்கள் போலிருக்கிறார்கள்.மற்றவரின் முன்னேற்றத்தையோ முயற்சியையோ உயர்ச்சியையோ கண்டபோது உள்ளம் எரிந்து நாசமாகின்றது.


இஃது எம் முரீத்களிலும், நல்லவர்போல் காட்சியளிப்பவரிடத்தும், முக்கியமானவர்கள் என கருதப்படுகின்ற சிலரிடத்தும் உள்ளதைப் பார்க்க நாம் கவலைப்படுகின்றோம் ஏன்? பாபம் இந்தக் கூட்டம் நாசமகப்போகிறதே
என்பதை நினைக்கும்போதுதான் கவலை.

சிலருக்கு நெருப்புக் கோபம் வருகிறது. வந்தவுடனே அவர்களுக்குக்
கண்மூக்கு தெரியாப்போகும். கண்மூக்கு தெரியாதவர் பாதை வழியே போவதும் ஆபத்து. எந்த நரகிற் போய் விழுவாரோ அதுவும் தெரியாது. இப்படி பொறாமையை வெளிக்கட்டுவோரும் உள்ளனர். உள்ளே அடக்கிக்கொண்டு
நிலைமாறுபவர்களும் உள்ளார்கள்.

இந்த நோய் இன்னும் சிலரிடத்து நீங்கவில்லை. இஃது ஒரு வகையான
கொடிய தொற்று நோய். இது தொற்றினால் நல்லவரையும் கெடுத்துவிடும்.


__ சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.


தகவல் : M. A. சிராஜூதீன். துபை.