Thursday, January 2, 2014

வசந்த மாதம் - மௌலிது நிகழ்ச்சி

(நபியே) உங்கள் நினைவை (புகழை) உங்களுக்காக உயர்த்தினோம்; என அல்லாஹ் தன் அருள்மறையில் அருளினான்.

இங்கு ""உங்கள் புகழை உயர்த்தினோம்'' என்பதற்கு ""திக்ர்'' என்னும் சொல்லை இறைவன் பிரயோகித்திருப்பது சிந்திக்கத்தக்கது. அல்லாஹ் தன்னைப் பற்றி நினைவு கூர வேண்டும் என்பதற்கு பிரயோகிக்கும் ""திக்ர்'' என்னும் சொல்லை பெருமானார் (ஸல்) அவர்களின் புகழுக்கு உபயோகித்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தை எடுத்துக் காண்பிக்கிறது. மேலும் அவர்களுக்கு தன் திருநாமங்களில் உள்ள ரவூப் - ரஹீம் என்ற நாமங்களைச் சூட்டி அழைப்பதும், ""யாஇபாதீ'' ""எனது அடியார்களே!'' என அவர்கள், மக்களை விளிக்குமாறு திருவசனம் அமைத்திருப்பதும் பெருமானார் (ஸல்) அவர்களின் பெருமையை உணர்த்துவதாக நாம் உணரலாம்.

இத்தகைய புகழுக்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் இந்த மாதம் நபி நேசர்களுக்கு வசந்த காலமாகி பெருமகிழ்வை அளிக்கிறது.

இந்த அருள் மாதத்தில் அவர்களின் சீறா என்னும் சீரிய சரித்திரத்தை, நாமும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். எல்லா முஸ்லிம் மக்களுக்கும் - மாற்றுமத மக்களுக்கும் நினைவுபடுத்த வேண்டும். அதற்காக மீலாது விழாக்களை ஊர்தோறும் - மஹல்லாதோறும் உற்சாகமாக நடத்த வேண்டும்.

இல்லங்கள் தோறும் மெளலிது ஷ­ரீபு ஓதி அவர்களின் புகழ் மழையில் நம் நாவுகள் - நம் செவிகள் - நம் இதயங்கள் நனைய வேண்டும்.


சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் ""நமக்கு மொத்தம் மூன்று பெருநாட்கள். ஒன்று ஈதுல்பித்ரு - இரண்டு ஈதுல் அழ்ஹா, மூன்று பெருமானார் பிறந்த 12ஆம் நாள். எனவே இந்த மாதம் முழுவதும் அதைக் கொண்டாடுங்கள்'' என்று கூறியதுபோல, பன்னிரண்டு நாட்கள் மட்டுமல்ல - ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் அண்ணலாரை எண்ணி எண்ணி மகிழ்ந்து கெண்டாடுவோம்.


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த வசந்தமாதமாம் ரபிஉல் அவ்வலின் பிறை கண்டு மனம் மகிழ்ந்து அகம் குளிர்ந்து கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை புகழ்ந்து புகழ்பாடுகின்றோம்.

















 ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஷார்ஜாவிலும் மௌலிது ஓதி அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் மேலுள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள்.



புகைப்படங்கள்
அதிரை அப்துல்ரகுமான்
முதுவை அகமது