Saturday, December 31, 2011

ஆரம்பமில்லாத ஆரம்பம்


 
விருட்சத்தின் விதையானேன்
விதையினுள் கருவானேன்
கருவுக்குள் திருவானேன்
திருவினுள் உருவானேன்
உருவினுள் அனைத்துமானேன்
அனைத்திலும் அமைவானேன்
அமைவினில் செயலானேன்
செயலினில் மனுவானேன்
மனுவினில் உருவானேன்
உருவினில் அருவானேன்
அருவினில் விதையானேன்!

- A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி M.A