கௌதுல் அஉளமே! பாமர மக்களின் உறக்கம் போலல்லாது என்னிடம் உறங்குங்கள்.
அப்பொழுது நீங்கள் என்னைக் காண்பீர்கள்.
இறைவா! நான் உன்னிடத்தில் எப்படி உறங்குவேன் என்றேன். அல்லாஹுத்தஆலா
சொன்னான். இன்பங்களைவிட்டும் உடல் அமைதி கொள்ளல். சரீர இச்சைகளை விட்டும்
நப்ஸூ அமைதி கொள்ளல். ஆலோசனைகளை விட்டும் கல்பு அமைதி கொள்ளல்.
பேச்சு, பார்வை, கேள்வி, ஆகியவற்றை விட்டும் ரூஹ் அமைதி கொள்கிறது கொண்டும்,
உமது உள்ளமை எனது உள்ளமையில் அழிந்து உமது வர்ணனை எனது வர்ணனைகளில்
தரிபடுகிறது கொண்டுமாகும்.
விளக்கம்:
பாமர மக்களின் உறக்கம் உண்டு குடித்து குடும்ப பாசத்தில் மயங்கி மதிமருண்டு இரண்டென்னும்
எண்ணத்தில் உறங்குவதாகும். ஞானியின் உறக்கம் ஊணும் நீயே பானமும் நீயே குடும்பமும் நீயே
உறக்கமும் நீயே நானே உன்னில் இரண்டறக் கலந்தேன் எனும் உறக்கமாகும். இந்த ஞான
உறக்கத்திலேதான் இறைவனைக் காணமுடியும். இன்பம் இச்சை என்பன அவனிலிருந்து இல்லாமற்போதல். தேவையற்ற நான் வேறு நீ வேறு என்னும் எண்ணங்களிலிருந்து விடுதலை
பெறுதல். பேசுவது என் பேச்சு, காண்பது என் பார்வை, கேட்பது என் கேள்வி எனும் நான் எனும்
மமதையை விட்டு எல்லாம் ஹக்கிலிருந்தே ஆகிறதாய் அறிந்து அமைதி கொள்தல்,
ஆசாபாசங்களை அறுத்து பஞ்சேந்திரியங்களும் அவனுக்கே உரித்து என எண்ணி இறை உள்ளமையில்
தன் உள்ளமையை அழித்து உன் வருனனையே என் வருணனை என் அவனில் முழுமையாய்க்
கலந்து இரண்டறக் கலந்திருத்தலே ஞானியின் தூக்கமாகும்.
கௌதுல் அஉளம் அவர்களுடைய ரிஸாலதுல் கௌதிய்யா எனும் நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து......
மொழி பெயர்த்தவர்கள் சங்கைமிகு குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் (ரலி) அவர்கள்.
விளக்கம் சங்கைமிகு குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா அவர்கள்.
Thanks -Sirajudeen Madukkur