Saturday, October 29, 2011

குரு ஒன்று கண்டேன்

குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

மதி யொன்று கண்டேன்
விதி காண வில்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா


அல்லாஹ்வின் தூதர்
அகிலத்தின் நீதர்
அண்ணல் தம்பேரர்
கலீல்அவுனாம் நாதர்

அகஞானம் தங்கும்
அருள்ஞானம் பொங்கும்
மறைஞானம் எங்கும்
காதிரியாவில் அங்கம்

அருள் தந்த
அரும் பொருளே (2)

மருள் அழித்த
முழுமதியே (2)

குணங்கொண்ட சீலர்
குரு எந்தன் குரு அல்லவோ

வந்தேன்
அறிந்தேன்-நின்றேன்
வாழ்கிறேன்

குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

தனையறிந்த ஞானம்
தன்னை மறப்பதில்லை
விழிநோக்கும் பேதம்
ஒளிசேர்ப்பதில்லை

தானென்ற யூகம்
தன்னைஅறிவதில்லை
நானென்ற தேகம்
நீயாவதில்லை

ஞானம் தந்த
அண்ணல் நபி (2)

வாழ்வு தந்த
வேந்தர் வழி (2)

என்றென்றும் மாறாத
மனிதன் நல்ல மனித னல்லவோ

வந்தேன்
அறிந்தேன-நின்றேன்;
வாழ்கிறேன்


குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

மதி ஒன்று கண்டேன்
விதி காண வில்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா


- கிளியனூர் இஸ்மத்