Sunday, October 23, 2011

இம்மையில் குருடன் மறுமையிலும் குருடன்

ஓ நண்பனே!
வாழும் போதே அவனை ஆர்வத்தோடு எதிர்பார்த்து நில்.
வாழும் போதே அவனை அறிந்துக் கொள்.
வாழும் போதே அவனை உணர்ந்து ஒன்றுபடு.
ஏனெனில் மீட்சியும் உய்வும் இம்மையில்தான் கிட்டும்.



வாழும் காலத்திலேயே உன் தளைகள் உடைபடவில்லையென்றால் மரணத்தில் மட்டும் உய்வுகிட்டிவிடுமா?

மரணத்திற்குப் பின் ஆன்மா அவனை அடையும் என்று நினைப்பது வெறும் கனவேயாம். ஏனெனில் ஆன்மா இறப்புக்குப் பின் உடலைவிட்டுப் பிரிந்து விடுகிறதே.

அவனை இப்போது காண்பாயானால் அப்போதும் காண்பாய். இல்லையெனில் மரணம் என்னும் மாநகரத்தில் பேய்தான் குடியேற நேரும்.

இறைவனோடு இப்போது நீ இணைவாயானால் பின்னரும் அந்நிலையை அடைவாய்.

மெய்ம்மையில் மூழ்கி எழு;உண்மையான குருநாதரை அறிந்துகொள்.இறைவனின் திருநாமத்தில் நம்பிக்கை வை.

கபீர் சொல்கிறார்- "உயிரின் தேடல் நாட்டமே உற்றுழி உதவும் துணை.தேடல் நாட்டத்திற்கு நான் அடிமை".

- கபீரின் நூறு பாடல்கள் நூலிருந்து