Monday, October 25, 2010
திருமுல்லைவாசலில் புனித கந்தூரிவிழா
துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 24.10.2010 அன்று ஞாயிறு திங்கள் இரவு குத்புல் அக்தாப் ஜமாலிய்ய செய்யிது யாசீன் மௌலானா அவர்களின் 46வது வருடக் கந்தூரிவிழா மற்றும் விசால்தினத்தை முன்னிட்டு இராத்திபத்துல்காதிரிய்யா மற்றும் கஸீதத்துல் யாசீனிய்யாவும் ஓதப்பட்டது.
இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் மற்றும் முரீதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ்விழாவில் அதிரை அப்துல்ரஹ்மான் தந்தைநாயகத்தின் புகழ்பாக்களை பாடினார்.
மன்னார்குடி மருத்துவர் அப்துல்மாலிக் இராத்தீபின் மீது நேர்ச்சைவைத்து அது நிறைவேறிய தனது அனுபவத்தைப் பற்றி சொற்பொழிவாற்றினார்.
இறுதியாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 29.10.2010 அன்று காலை 8.30மணிக்கு புர்தா நிகச்சியுடன் தந்தைநாயகத்தின் விசால்தினத்தின் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறஉள்ளன அதிலும் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.