Wednesday, September 30, 2009

அவ்ன் நாயகர் 74

1. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் திருமரபாகிய அஹ்லபைத்தில் 34ஆவது தலைமுறைப் பேரராக உதித்தது.

2. முஹிய்யத்தீன் ஆண்டகை(ரலி) உதித்த பகுதாதில் அவ்ன்நாயகரின் பாட்டனார் ஜமாலிய்யா மௌலானா (ரலி) பிறந்து - வளர்ந்து - வாழ்ந்து - படைத்தளகர்த்தராக பணியாற்றியது.

3. தன்னிகரற்ற மாமேதையாக அறபு மொழிக் களஞ்சியமாக குத்புல்பரீதாக விளங்கிய மாமேதை யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் மகவாகப் பிறந்தது.

4. புகாரி ஷரீபுக்கு அறபு மொழியில் விரிவுரை எழுதிய பல்கலைக் கழகமான தந்தையிடமே அறபுக் கல்வியை - ஆலிமுக்குரிய கலைகளைப் படித்துக் கொண்டது.

5. தந்தையார் தோற்றுவித்த "தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா"வை தொடர்ந்து வழி நடத்தும் காமில் ஷைகாக உயர்ந்தது.

6. தந்தையாரைப் போலவே அறபு மொழியில் பாக்களும் இயற்றுவது.

7. முன்னோர்களிலிருந்து இவர்கள்வரை "விலாயத்" எனும் வலித்துவம் அறுபடாமல் தொடர்ந்து வருவது.

8. தமிழ் ஆங்கிலம் பயின்று இலங்கையில் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து கல்வி அதிகாரியாக உயர்ந்தது.

9. தாங்களே தமிழ் மொழியின் உயர் கல்வியைப் படித்து தமிழ் வித்துவான்களும் திகைக்குமளவு தமிழாற்றலை வளர்த்துக் கொண்டது. தமிழில் அத்துணை பா வகையிலும் இலக்கணப் பிழையின்றி மரபுக் கவிதைகள் யாப்பது.

10. முந்தி வாழ்ந்த தமிழ்ப் புலவர்களைப் போல சித்திரக்கவி வரையும் ஆற்றல் பெற்றிருப்பது.

11. அழகான ஓவியங்கள் வரையும் தனித்திறன் பெற்றிருப்பது.

12. திரு.வி.க. போன்ற மாபெரும் தமிழ் அறிஞர்களைப் போல தீந்தமிழில் உரைநடைகள் எழுதுவது.

13. அறபு மொழியிலிருந்து அழகு தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் பெற்றிருப்பது.

14. ஈழவள நாட்டில் பயிர் பெருக்க வாரீர் - இறையருட்பா - மகானந்தாலங்காரமாலை - நாயகர் பன்னிரு பாடல் - அற்புத அகில நாதர் - இறைவலிய் சய்யிது முஹம்மது மௌலானா போன்ற கவிதை நூற்களும் பேரின்பப்பாதை - யாசீன் (ரலி) - தாகிபிரபம் - ஹகாயிகுஸ்ஸபா போன்ற உரைநடை நூற்களும் பர்ஜன்ஜீ மௌலிது - ரிஸாலா கௌதிய்யா - பத்ருமவ்லிது - துற்பத்துல் முர்ஸலா ஆகிய மொழிபெயர்ப்பு நூற்களும் உமர் (ரலி) புராணம் எனும் காவியமும் யாப்பிலக்கண நூல் ஒன்றும் என பதினாறு நூற்கள் எழுதியது இன்னும் பல நூற்கள் எழுதிக் கொண்டிருப்பது. தந்தை யாசீன்நாயகம் அவர்களின் அறபு - அறபுத் தமிழ் அகராதியை பல புதிய சொற்களுடன் பதிப்பிப்பது.

15. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான முரீதுகளின் குருவாக விளங்குவது.

16. முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) - அப்துல் கறீம் ஜீலி (ரலி) போன்ற மாபெரும் ஞானிகள் நிலை நின்று உலகுக்கு எடுத்தோதிய வஹ்தத்துல் வுஜூது கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு உலகுக்கு வெளியாக்குவது.

17. ஷரீஅத்தை முழுமையாகக் கடைப்பிடித்து நடப்பது.

18. சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைக்கு உறுதுணையாக இருப்பது.

19. முன்னோர்கள் ஸாலிஹீன்கள் வழி நின்று மௌலிது - பாத்திஹா - ஜியாரத் போன்ற செயல்களை எடுத்து நடத்தி - பிறரையும் நடத்தத் தூண்டுவது.

20. வஹ்ஹாபிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது.

21. எத்துணை எதிர்ப்புகள் வந்த போதும் கொண்ட கொள்கை உறுதிமாறாமல் நிலைநின்று எதிரிகளை வெல்வது.

22. ஞானம் என்ற பெயரில் அறிவுக்கொவ்வாத மூடக் கொள்கையைக் கொண்டிருப்பதை தெளிந்த அறிவால் நீக்குவது.

23. எண்ணற்ற கராமத்துகளை நிகழ்த்தியது- நிகழ்த்தி வருவது. முன்னால் பார்த்து அறியாதவர்களின் கனவில் காட்சி தந்து அவர்களுக்கு நேர்வழி காட்டியது.

24. மார்க்க அறிஞர்கள் - உலகியல் அறிவு பெற்ற படித்தவர்கள் - பட்டதாரிகள் டாக்டர்கள் என பலதரப்பட்டவர்களை முரீதாக பெற்றிருப்பது.

25. ஏழை பணக்காரர் படித்தவர் பாமரர் அனைவரையும் சமமாக நடத்துவது.

26. நீண்ட நேரம் உரையாற்றாமல் சுருக்கமாக - எளியமுறையில் ஞானத்தை விளங்க வைப்பது.

27. குர்ஆன் - ஹதீஸில் உள்ளவற்றை மறுக்காமல் அப்படியே நம்பி அவற்றின் உள்ளார்த்தமான தத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது.

28. சூனியம் மலக்கு ஜின் நப்ஸ் ஆலமுல் பர்ஜக் - ரூஹ_ - மலகூத் - ஜபரூத் போன்றவைகளின் உண்மைத் தத்துவத்தை உரைத்தது.

29. குர்ஆன் ஷரீபின் அதிமுக்கியத்துவத்தை விளங்க வைத்தது.

30. ரசூல்(ஸல்) அவர்களின் அந்தரங்கத்தை விளங்க வைத்தது.

31. அவர்களின் நேசத்தை ஆழமாக விளங்கவைப்பது.

32. அல்லாஹ்வை இன்னதென்று விளக்கி குழப்பமில்லாமல் விளங்கவைப்பது.

33. நம் மனதில் எழும் சந்தேக வினாக்களுக்கு நாம் கேட்காமலே விடைபகர்வது.

34. நாம் வைக்கும் கோரிக்கைகளை அன்போடு கேட்டு ஏற்று அல்லாஹ்வின் அருள் உதவியால் நிறைவேற்றித் தருவது.

35. இறைஞானத்தை மத பேதமின்றி ஒன்றுபட்டு சிந்திக்க ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையைத் தோற்றுவித்து முப்பத்து ஐந்து ஆண்டுகளாக நிர்வகித்து வருவது.

36. ஆன்மீகத்திற்கென மறைஞானப் பேழை மாத இதழைத் தொடங்கச் செய்து 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரச் செய்வது.

37. மார்க்க கல்வி - உலகக் கல்வி தஸவ்வுப் ஆன்மீகக் கல்வி தொழிற்கல்வியைக் கற்றுத் தரும் "மதரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாசீன்" அறபுக் கல்லூரியை நிறுவி 10 மாணவர்களிலிருந்து இன்று நூறு மாணவர்கள் பயில வசதி செய்து "யாஸீனிய்" எனும் பட்டமும் வழங்கி நிர்வகித்து வருவது.

38. அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை நிறுவி சமூக சேவை செய்து வருவது.

39. எழுபத்து நான்கு வயதிலும் சற்றும் ஒய்வின்றி பல நாடுகளுக்குச் சென்று வருவதுடன் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருப்பது.

40. மிகவும் எளிமையாக உடை அணிவது.

41. தங்கள் பணிகளை தாங்களே செய்து கொள்வது.

42. விருந்தினர்களை அவர்கள் வியந்து மலைக்கும் வண்ணம் கவனித்து கவுரவிப்பது.

43. பாராட்டு முகஸ்துதி அறவே வெறுப்பது.

44. முரீதுகளுக்கு தாங்கமுடியாத அமல்கள் அவ்ராதுகள் என அதிகச்சுமைகளை சுமத்தாமலிருப்பது.

45. ஏழைகளின் அழைப்பை ஏற்று அவர்களின் இடத்துக்கேசென்று துஆச் செய்து மகிழ்விப்பது.

46. குழந்தைகள்மீது பேரன்பு செலுத்துவது குழந்தைகள் வலிமார்கள் என்று இதுவரை யாரும் சொல்லாத உண்மையை எடுத்துரைத்தது.

47. முரீதுகள் அண்ணன் தம்பிகளைவிட ஆதரவான உறவு உள்ளவர்கள் என அறிவித்தது.

48. பணக்காரர்கள் ஏழைகளின் வீட்டில் பெண் எடுப்பது.

49. உலகை வெறுக்கத் தேவையில்லை. உலகம் இன்னதெனப் புரிந்து நன்கு படித்து - நன்கு சம்பாதித்து சொந்த வீடு வாகனங்கள் என மகிழ்ச்சியாக வாழ்வதோடு ஏழைகளை நன்கு கவனித்து உதவி செய்து உயர்த்த வேண்டும் என உரைத்து அதன்படியே முரீதுகள் வாழச் செய்வது.

50. எந்த நேரத்திலும் மனம் சோர்வடையாமல் எந்த ஓர் இலக்கையும் தைரியமாக அடையஊக்கம் தருவது.

51. அவர்களின் கரம் பிடித்தவர்கள் எவரும் இருந்த நிலையிலிருந்து இறங்காமல் மேலே மேலே முன்னேற அறிவுரை தருவது.

52. முரீதுகளைப் பல ஆபத்துகளிலிருந்து கண்கூடாகக் காப்பாற்றி வருவது.

53. கொடிய நோய்களான தீர்க்க முடியாத நோய்களை நீக்கி சுகவாழ்வை அருள்வது.

54. குழந்தைவரம் கேட்டவர்களுக்கு அவர்கள் நம்பியபடி குழந்தை பாக்கியத்தை பெற வைப்பது.

55. ஞான விளக்கத்தில் முதிர்ந்தவர்களாக தங்கள் முரீதுகளை உயரச்செய்தது.

56. எமக்கு கூட்டம் தேவையில்லை. எம்மிடம் ihஅத் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஞானத்தை விளங்கி இறைவனை அறிந்து வாழ்ந்தாலே போதுமென்பது.

57. உள்ளே மஃரிபத்தும் வெளியே ஷரீஅத்தும் நிறைந்த முழுமையான மனிதனாக வாழவேண்டும் என்பது.

58. புதிய சுன்னத் வல் ஜமாஅத் பரிசுத்தமான சமுதாயம் அமைய வேண்டும் என ஆசைப்படுவது.

59. அனைத்து மார்க்கங்களின் அடிப்படையான ஞானத்தைச் சிந்தித்து அதில் மனிதர்கள் ஒன்றுபட்டால் வேற்றுமைகளற்ற ஒற்றுமையான மனித சமுதாயம் உருவாகும் என வழிகாட்டுவது.

60. தொழுகையில் பல எண்ணங்கள் வருகின்றன அதை நீக்க வழி என்னவென்று வினவியபோது அந்த எண்ணமும் ஹக்கே என எண்ணிவிடுவதே அதற்குரிய வழி என்று விடைபகர்வது.

61. ஹக்கும் ஹல்கும் இரும்பும் நெருப்பும் போல என காலம் காலமாக ஞானிகள் கூறிவந்த உதாரணத்திற்கும் மேலாக அது ஒருவகை படித்தரமே ஆனால் உயர்ந்த நிலை கடலும் அலையும்போல இருப்பதுதான் ஹக்கும் ஹல்கும் என தெளிவுபடுத்துவது.

62. எதை எதையோ பாவம் என நினைத்திருக்க தன்னை அறியாதிருப்பதே பாவம் என தெளிவுபடுத்துவது.

63. ஹக்கு வெளியாகி இருக்கும் ஹ+வல்ஆன கமாகான என்பதனை சுருக்கமாக "தானே தன்னில் தானானான்" என சுலோகமாக்கியது.

64. இறைவன் எப்போதும் மறவாமலிருக்க எந்நேரமும் திக்ரு செய்யுங்கள் என சுப்ஹானல்லாஹ் - மாஷா அல்லாஹ் - அல்ஹம்துலில்லாஹ் எனவெல்லாம் வரிசையாக அச்சிட்டுப் பள்ளிகளில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆனால் அனைத்திலும் ஹக்கைக் காண்பதே ஹக்கை கணந்தோறும் மறவாமல் இருப்பதற்குரிய வழி யென்று நயமாக உரைப்பது.

65. மனிதன் இருக்கும்போது அவனுக்கு அறிவுண்டு எனக்கருத வேண்டாம் இறந்தாலும் அவனுக்கு அறிவுண்டு என அறிவுறுத்துவது.

66. ஹக்கின் ஒன்றிப்பே சுவர்க்கம் என சொர்க்கத்தை அறிமுகம் செய்வது.

67. பொருள்களில் வித்தியாசம் காணாதிருப்பதே ஃபாவில் முதல்படி என ஃபனா நிலையை விபரிப்பது.

68. ரசூல்(ஸல்) அவர்கள் தம் உடலை கவனித்தால் அவர்கள் ஹக்கின் அப்து. ஹக்கின் பகுதிகளில் ஒருபகுதி. அவர்கள் தம் சூக்குமத்தையும் தூலத்தையும் சேர்த்துக் கவனிக்கும் போது ஹக்கான(இறையின் பூரணத்)தோன்றல் என பெருமானார் (ஸல்) அவர்களின் அகமியத்தை உணர்த்துவது.

69. கவலையும் வேண்டாம் சந்தோசமும் வேண்டாம் ஹக்கே நமக்கு வேண்டும் என வாழ்க்கை வழிகாட்டுவது.

70. உலக வாழ்க்ககையை தவ்ஹிதில் சிந்தித்தால் எல்லாவற்றிலும் மோட்சம் காணலாம் என உரைப்பது.

71. எப்போதும் நேர்மையாக நடக்கவேண்டும் என வலியுறுத்துவது. கோபம் பொறாமை தற்பெருமை இவற்றை ஒழித்தே தீரவேண்டும் என வற்புறுத்துவது.

72. தொழுகையை சந்தோசமாக தொழச் சொல்வது.

73. முரீதுகள் எப்போது நினைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் உயிரோடு உயிராக கலந்து அணுவோடு அணுவாக பதிந்து எந்த சந்தேகமுமின்றி உதவிக்காப்பது.

74. இந்த நூற்றாண்டுக்கு நாமேயுள்ளோம். இனி நமக்குப் பின் வரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையிலேயே நடைபெறும். எம்மை இந்த ஜமானில் அண்டியவர்கள் பெறும் பேறு பெற்றவர்களே!
எம்மைவிட்டு கைசேதப்பட்டவர் எம்மைப் போன்றவர் இதற்கு பின்னால் எவரும் தோன்றமாட்டார். இதுவே ஹக்கின் பஷாரத் (நன்மாராயம்)ஆகும் என முத்திரை பதித்தது.....!


நன்றி---- ஆலிம் புலவர்

நன்றி--- மறைஞானப்பேழை