Sunday, November 17, 2013

மூன்றாம் ஆண்டு விளையாட்டுப் போட்டி ( Mumzar Fun 2013)

துபாய் மம்ஜர் (Mamzar Park)பூங்காவில் 3ம் ஆண்டு ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன.

நவம்பர் 15ம் தேதி காலை 9.00 மணிக்கு துவங்கி மாலை 5.00 மணிவரையில் பல போட்டிகள் நடைபெற்றன. மதியம் ஜும்மா தொழுகைக்குப் பின் அனைவருக்கும் ஸ்பெஷல் பிரியாணி வழங்கப்பட்டது.
மாலை டீ வடையும் இனிப்பும் வழங்கப்பட்டது.

பலூன் உடைத்தல்
 தொடர் ஓட்டம்
வாலியில் பந்தை போடுவது
கோகோ
கேள்வி - பதில்
வினாடி வினா
கயிறு இழுக்கும் போட்டி
மூன்று கால் ஓட்டம்

இந்த போட்டிகளில் A,B என இரு பிரிவுகள். ஏ. கேப்டன் மதுக்கூர் சாகுல்அமீது பி. கேப்டன் முதுவை அகமது இம்தாதுல்லா.
இரு குழுவினர்களும் மிக நன்றாக விளையாடி சிறிய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் பரிசுக் கோப்பையை ஏ குழுவினர் வென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு காலை 9.00 மணிக்கு பூங்காவிற்கு வருகைதந்த இலங்கை சகோதரர் தஸ்ரிப் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் ரஹமத்துல்லா முதுவை ஐக்கிய ஜமாஅத்தார்களும் பைஜி தரிக்காவினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாலை 5.00 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் நன்றி உரை நிகழ்த்தி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சலவாத்துடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

பரிசு பொருள்கள் வழங்கிய ஸ்பான்ஷர்ஸ்களுக்கு நன்றி
ஏ.பி.ஜலீல் திருமக்கோட்டை
ஜெகபர் சாதிக் மதுக்கூர்
அதிரை ஷர்புதீன்

நன்றி
அகமது இம்தாதுல்லா முதுவை
இதயத்துல்லா மதுக்கூர்
அபுல்பசர் ஆழியூர்
ஷேக்தாவூது மன்னார்குடி
சாகுல்அமீது மதுக்கூர்
அதிரை அப்துற் றகுமான்
சென்னை பஷிருல்லா
அமீர்அலி மதுக்கூர்
சாதிக் மதுக்கூர் சாதிக் திண்டுக்கல்
கிளியனூர் இஸ்மத்






































































































































































































புகைப்படங்கள்

மதுக்கூர் சாதிக்
அதிரை அப்துற் றகுமான்
முதுவை அகமது இம்தாதுல்லா