அகிலத்தின் அற்புத நாதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் உதய தின மற்றும் மத நல்லிணக்க விழா ஈரோடு அத் தரீக்கதுல் ஹக்கியதுள் காதரிய்யவை சார்ந்த ஏகத்துவ மெய்ஞான சபையினரால் 26.1.13 சனி இரவு 7 மணிக்கு ஈரோடு திருநகர் காலனி , இரண்டாம் தெரு ,ஹாஜி மர்ஹும் UKM அரங்கில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது .
விழா தலைவர் முன் மொழிவினை ஜனாப் K .பரகத் அலி ஹக்கியுல் காதிரி கூற , அதை ஜனாப் .M .முபாரக் அலி ஹக்கியுல் காதிரி வழி மொழிந்தார் . கிராத் MAK .ஒலியுல்லாஹ் ஹழ்ரத் ,சேலம் அவர்களால் ஓதப்பட்டது . இறை துதிப்பா வஹ்ததுல் வுஜுதை ஜனாப் நத்தர் ஒலி ஹக்யுஇல் காதிரி ,திண்டுக்கல் அவர்கள் ஓதினார்கள் . ஈரோடு ஏகத்துவ மெய் ஞான சபை உதவி தலைவர் மற்றும் செயலாளர் கலீபா ஹாஜி N . அப்துல் ஜப்பார் ஹக்கிஉல் காதிரி ஈரோடு அவர்கள் தலைமையுரையற்றினர்கள் . ஜனாப். நா .அ .பசீர் அகமது ஹக்யுஇல் காதிரி கொச்சின் ,கேரளா அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள் .
மௌலவி ரபியுதீன் நூரி ஆலிம் திருச்சி யாசீன் அரபிக் கல்லூரி அரபி பேராசிரியர் மற்றும் மேலாளர் அவர்கள் "நாயகத்தின் சிறப்புகளை "பற்றி வெகு சிறப்பாக உரையாற்றினர் . அடுத்து சைய்யது முஹம்மது மிஸ்பாஹி , திருச்சி யாசீன் அரபிக் கல்லூரி அரபி பேராசிரியர் அவர்கள் "நாயகத்தின் அற்புதங்களை" பற்றி மிக சிறப்பாக உரையாற்றினர்.
ஜனாப். முஸ்தபா ஹக்யுஇல் காதிரி ஈரோடு அவர்கள் நபி புகழ் பாடலை அழகாக பாடினார்.ஜனாப்.பாரூக் அலி ஹக்யுஇல் காதிரி ஈரோடு அவர்கள் சிறப்பு பேச்சாளர் ரபியுதீன் நூரி அவர்கட்கு பொன்னாடை போர்த்தினார். சிறப்புரையாற்றிய செய்யது முஹம்மத் மிஸ்பாஹி அவர்கட்கு ஜனாப். S. ஆரிப் இஞ்ச்னியர் ஹக்யுஇல் காதிரி ஈரோடு அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவபடுத்தினார்கள் . கலீபா ஹாஜி A . சதக்கத்துல்லாஹ் ,ஈரோடு அவர்கள் நன்றி உரையாற்றினார்கள் . மௌலவி ரபியுதீன் நூரி துஆ ஓதி பின்னர் அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது .
இந்த விழாவில் மாற்று மதத்தை சார்ந்த பலரும் கலந்து கொண்டதால் மத நல்லிணக்க விழாவாகவும் அமைந்தது. மேலும் பள்ளிவாசல்களின் இமாம்கள் ,முத்தவல்லிகள் ,மற்ற தரீக்காகளின் கலீபாக்கள் ,பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கிராத் ஓதுகிறார்கள் - M A K ஒலியுல்லாஹ் ஹஜ்ரத் ஹக்கியுல் காதிரி அவர்கள் , சேலம்
ஈரோடு ஏகத்துவ மெய் ஞான சபையின் உதவி தலைவர் ஹாஜி N .அப்துல் ஜப்பார் ஹக்யுஇல் காதிரி
அவர்கள் தலைமை உரையாற்றினார்கள்.
திண்டுக்கல் நத்தர் ஒலி ஹக்யுஇல் காதிரி அவர்கள் வஹ்ததுல் வுஜூத் என்ற ஞானப்பாடலை பாடுகிறார்கள்.
ஜனாப் பசீர் அகமது ஹக்யுஇல் காதிரி கொச்சின் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள் .
பார்வையாளர்கள் ஒரு பகுதி
செய்யது முஹம்மது மிஸ்பாகி ,திருச்சி யாசீன் அரபிக் கல்லூரி ,அரபி விரிவுரையாளர் அவர்கள்
நாயகத்தின் அற்புதங்களை பற்றி மிகசிறப்பாக உரையாற்றினார்
மௌலவி ரபியுதீன் நூரி ஆலிம் ,திருச்சி யாசீன் அரபிக் கல்லூரி மேலாளர் மற்றும் விரிவுரையாளர்
அவர்கள் "நாயகத்தின் சிறப்புகளை வெகு சிறப்பாக உரையாற்றுகிறார்
ஜனாப் முஸ்தபா ஹக்யுஇல் காதிரி ஈரோடு அவர்கள் ஒரு அற்புதமான நபி புகழ் பாடலை பாடினார்
ஹாஜி கலீபா A . சதகத்துல்லாஹ் , ஹக்யுஇல் காதிரி ஈரோடு நன்றியுரையாற்றினார் .
தகவல்
கொச்சின் பஷீர்அகமது
நன்றி