இது
மகான்களின்
அடக்கஸ்தளம்
மாட்சிமை நிறைந்த
ஆன்மீகஸ்தளம்
அங்கு
யாரும் யாரையும்
வணங்குவதில்லை!
மனிதர்களை
வணங்குவது
இஸ்லாமியம் அல்ல
ஆனால்
மகான்களிடம்
இணங்காதோர்
இஸ்லாமியர்கள் அல்ல!
புதைக்கப்படுவது
மகான்களை அல்ல
அவர்கள்
விதைக்கப்படுகிறார்கள்
இறை நிறைந்த
அவர்களது வாழ்க்கையில்
இணையுமில்லை
இறைவனோடு அவர்களுக்கு
திரையுமில்லை!
இவர்கள்
அச்சப்படமாட்டார்கள்
துக்கப்படவும்மாட்டார்கள்
அச்சமற்றவர்களின்
அனுபவங்களை
ஏற்பதும் அவர்களை
சிறப்பதுவுமே
இஸ்லாம்!
வாழ்ந்தவர்களைப் பேசப்பட
வேண்டுமானால்
அவர்களின் கப்ருகளை
நினைவுகூற வேண்டும்
கப்ருகளின் சரித்திரம்தான்
அல்குர்ஆன்!
நினைவு கூறுவது
ஷிர்க் என்றால்
அல்லாஹ்வை அறியாமல்
அனுஷ்டிக்கும் ஆற்றலுக்கு
என்ன பெயர்?
தர்ஹாவிற்கு செல்வது
பாபம் அல்ல
ஆனால்
மனிதன் தன்னை அறியாமல்
வாழ்வதுதான் பாபம்!