Saturday, October 6, 2012

மற்ற மதங்களை இஸ்லாம் ஜெயித்தபோது....



இன்றும் ரஸூல் (ஸல்) அவர்கள் வரலாற்றின் அனைத்து தலைவர்களையும் ஜெயித்து நிற்கின்றபோது. தோற்ற, தோற்கின்ற அனைவருக்கும் ஏற்படுகின்ற கோபம் காழ்ப்புணற்சியாய் மாறி பலவழிகளிலும் வெளிப்படுவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அமெரிக்காவில் வாழும் இழிந்த ஒருவன் தனது தரமற்ற சிந்தனையின் புழுக்கத்தின் விளைவால் ரஸூல் (ஸல்) அவர்கள்மீது களங்கத்தை விதைக்கக் கருதி ரஸூல் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் (நவூதுபில்லாஹ்.) விதத்தில் சினிமா படம் ஒன்றை எடுத்தான்.

முஸ்லிம்கள் அறியாமையில் இருப்பதாய்க் கூறி அழுதான். இதுதான் அவன்கண்ட முடிவு. புத்தியில்லாதவனின் மூளையற்ற முடிவு.

ஆனால் மிகப்பெரிய அறிஞர் என்று அமெரிக்கர்களே ஒப்புக்கொண்ட பெர்னார்ட்ஷா என்னும் நல் மனிதர் என்ன கூறினார் எனும் வரலாற்றுப் பதிவைப் பாருங்கள்.

"முகம்மது நபியைப் போன்றவர் உலகின் சர்வாதிகாரியானால் உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும்."

"நான் எதையாவது நன்மையானவற்றை யோசித்து சொல்ல நினைத்தேனேயானால அதனை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முகம்மது நபி அவர்கள் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்கள்".

பாருங்கள் பெர்னாட்ஷாவின் நற்சிந்தனை ரஸூல் (ஸல்) அவர்களைப் பற்றி எவ்வளவு உயர்வானதாய் இருக்கிறது. இவர் அறியாமையிலா இருக்கிறார்? இவரைவிட இப்படம் எடுத்தவன் சிந்தனைவாதி என நிச்சயமாக உலகம் ஒப்புக்கொள்ளாது. 

மைகேல் ஹார்ட் என்பவர் உலகின் தலை சிறந்த தலைவர் 100 பேரை தேர்ந்தெடுத்தார் அதில் முதலாவது இடத்தை ரஸூல் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தார். அதற்கு அவர் கூறிய காரணமான ரஸூல் (ஸல்) அவர்களின் சிறப்புக்களை உலகமே அறியும்.இவர் அறியாமையில் இருக்கிறாரா? இவரைவிட இப்படம் எடுத்தவன் பெரிய சிந்தனைவாதி அல்ல.

கலீலியோ பூமி தட்டையல்ல உருண்டை என்று சொன்னபோது கிருத்தவர்கள் அவருக்குக் கொடுத்த சித்திரவதைகள் அதை உலகம் அறியும்.வரலாறு இதை பதிந்து வைத்திருக்கிறது.ஆனால் இன்று உலகம் உருண்டை என்று சிறு குழந்தைகள் கூட தடையின்றி சுதந்திரமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. உலகம் அறிவை நோக்கி பயணிப்பதால் இந்த உண்மையை சொல்லவைத்தது.

இன்று இவன் கூறுவதையும் உலகம் மாற்றும் இவனைப்போன்றவர்களையும் ரஸூல் (ஸல்) அவர்களின் புகழை தடையின்றி பாடவைக்கும் காலம் வெகு தூரத்தில் இலலை. ரஸூல் (ஸல்) அவர்களே சிறந்தவர்கள். அவர்களை பின்பற்றும் முஸ்லிம்கள் அறியாமையில் இல்லை, இஸ்லாமே சிறந்த மார்க்கம் என்று இவன் மட்டுமல்ல உலகம் கூறும் காலம் வந்துதான் ஆகும். ஏனெனில் உலகம் அறிவை நோக்கி பயணிக்கிறது.

இதுபோன்ற கூத்துக்கள் இன்று நேற்றல்ல முன்பிருந்தே நடந்து வருகிறது. காழ்ப்புணர்வை உமிழும் குப்பை இவன். இவர்கள் தோற்றே போவார்கள்.  மற்ற மார்க்கங்களை இஸ்லாம் ஜெயித்தபோது கிருத்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஏற்ப்பட்ட கோபம் இன்றளவும் வெளிப்படுவதில் ஆச்சர்யமில்லை. 

M.A. சிராஜுதீன். துபை.