Tuesday, June 19, 2012

ரஸூல் (ஸல்) அவர்களின் முஉஜிஸாத் எனும் அற்புதம்.


ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குதாஇய்ய வமிசத்தைச் சேர்ந்தஉம்மு மஉபது(டைய வீட்டு)க்குப் பக்கமாக உள்ள குதைத் பக்கம் சென்று
கொண்டிருந்தார்கள்.

அங்கே இறைச்சி அல்லது பால் வாங்க விரும்பினார்கள். அந்தப் பொருள்களில் எதையும் அந்தக் கூடாரங்கள் (இல்லங்கள்) பொதிந்தனவாக இருக்கவில்லை.
(அதாவது அந்தக் கூடாரங்களில் எந்தப் பொருள்களுமிருக்கவில்லை.)

மேய்தற்குப் பலம் பெறாத ஓர் ஆட்டினை ஒரு வீட்டில் பார்த்தார்கள். 

அந்த ஆட்டில் பாற் கறப்பதற்காக அனுமதி வேண்டினார்கள்.  அப்பெண் அனுமதிகொடுத்துவிட்டு அதில் பால் இருப்பின் நாம் ஊற்றித் தந்திருப்போமே என்று
கூறினார்.

ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆட்டின் பால் மடியைத் தடவிஎஜமானனும் கர்த்தாவுமான அல்லாஹ்விடத்து இறைஞ்சினார்கள்.

அப்போது பாற் சுரந்தது. பாற்கறந்தார்கள். கூட்டத்தார் ஒவ்வொருவரும் அருந்தினார்கள். தாகந்தீர்ந்தார்கள்.

பிரித்தும் பாற்கறந்த்தார்கள். பாத்திரத்தைப் (பாலால்) நிரப்பினார்கள். தங்களுடையவெளிப்படையான (தெளிவான) திருட்டாந்தரமாக (முஉஜிஸாத் எனும் அற்புதமாக)அந்தப் பெண்ணிடத்தே அதை (அப்பாலை) விட்டுச்சென்றார்கள்.

அபூமஉபத் என்பவர் வீட்டுக்கு வந்தார். பாலை பார்த்தார். முடிவில்லா ஆச்சர்யம்
அவருக்கேற்பட்டது.

ஒருதுளி பால் கூட வடியக்கூடிய பால் கறக்கும் ஆடுகள் வீட்டில் இல்லாதிருக்கஇது (பால்) உமக்கு எப்படி வந்தது? என்று அபூமஉபத் கேட்டார்.

அப்போது உம்மு மஉபது இவ்விவ்வாறுள்ள உடலமைப்புடையவரும் கருத்தாழமுடயவருமான ஆசீர்வாதத்தையுடைய மனிதர் ஒருவர் நம்மிடத்து வந்து
சென்றார். என்று சொன்னார்.

மேலும் இப்னு மஉபத், இவர் குறைஷ் வம்சத்தையுடயவர் என்று முழுமையானசத்தியப் பிரமாணமாகச் சத்தியம் பண்ணி(க் கூறி)னார்.

அப்போது இப்னு மஉபத் பெருமானார் அவர்களைக் கண்டிருந்தால் நிச்சயமாகஅவர்கள்மீது நம்பிக்கைக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து நெருக்கமானவராகவும் இருந்திருப்பார்.

--சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள் மொழிபெயர்த்த "பர்ஸன்ஜிய் மவ்லித்" மொழிபெயர்ப்பிலிருந்து..


Thanks -Sirajudeen