Sunday, May 6, 2012

நாயகத்தின் பேரா! நானிலம் போற்றும் நாகூரா!!


தேனீக்கள் நாங்கள்தான் தேடும் நாதா
       ****தீன்சுவையை நாடித்தான் வருவோம் நாதா
மாணிக்கப்(பூர்) உங்களைத்தான் நாடும் நாதா
     ****மாசற்ற நற்குணங்கள் போற்றும் நாதா
மாணிக்கப் போதனைகள் கேட்டோம் நாதா
     ****மாநிலத்தில் சாதனைகள் பார்த்தோம் நாதா
ஞானிக்கள் விடையறியா வினாவே நாதா
     ****ஞாலத்தில் ஞானம்தான் பெரிது நாதா

 
மதிநாவால் வென்றீரே எம்நா கூரா
     ****மடமையினைக் களைந்தீரே உம்நா கூரால்
மதினாவின் மன்னர்க்கு நீர்தான் பேரா
    ****மக்களெல்லாம் ”கூடு”கின்றார் உன்றன் பேரால்
கதிநாடி வந்தோர்க்கு துன்பம் நேரா
     ****காட்டுகின்ற வழிகள்தான் அன்பின் பேரால்
விதியோடுப் போராடி நோய்கள் தீரா
    ****விரக்தியில் வாடுகின்ற எம்மைப் பாரீர்!

-
எண்சீர் கழிநெடிலடி விருத்தப்பா (காய்+காய்+காய்+தேமா எனும் வாய்பாட்டின் அமைப்பு)-
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)