துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஏப்ரல் - 5ம் தேதி வியாழன் வெள்ளிமாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரியா நிகழ்ச்சி மௌலானாமார்களின் முன்னிலையில்நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஏப்ரல் மாதக் கூட்டம் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி. சகாபுதீன் தலைமையில் நடைபெற்றது.
சங்கைமிக்க வாப்பா நாயகம் இந்த ஆண்டு துபாய் வருகையைப் பற்றி மாதாந்திரக் கூட்டத்திற்கு பின் நிர்வாகக் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
நிறைவாக தப்ரூக் வழங்கி சலவாத்துடன் நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான் ஹக்கியுல்காதிரி