Saturday, March 31, 2012

புத்துணர்ச்சி சந்திப்பு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக 30/03/2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு துபாய் மம்ஜர் பூங்காவில் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

காலை 10.30 மணிக்கு கால் பந்து விளையாட்டு துவங்கியது உறுப்பினர்கள் பலரும் ஆர்வத்துடன் விளையாடினார்கள். ஜூம்ஆ தொழுகைக்கு பின் பலூன் வெடித்தல் விளையாட்டும் அதன் பின் பந்து வளையம் விளையாட்டும் நடைபெற்றது.இப்போட்டிகளில்

ஜாஹித்அலி மௌலானா மற்றும் அதிரை சர்புதீன் வெற்றி பெற்றார்கள்.

மதியம் உணவுக்குப் பின் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. "சினிமா மற்றும் தொலைக்காட்சி மக்களுக்கு வழி கொடுக்கிறதா? வழி கெடுக்கிறதா? " என்ற தலைப்பில் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுமிகளும் ஓட்டப்பந்தயம் விளையாட்டில் கலந்துக் கொண்டார்கள் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மாலை 4.00 மணிக்கு டீ மற்றும் வடை வழங்கப்பட்டது.

உணவு ஏற்பாட்டை மதுக்கூர் ஹிதயத்துல்லாஹ்வும் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடுகளை மதுக்கூர் அமீர்அலி மதுக்கூர் பஷீர் மற்றும் கிளியனூர் இஸ்மத் செய்தார்கள். மாலை 6.00 மணிவரையில் மிக சிறப்பாக இந்நிகழ்ச்சி நடைபெற்று இனிதே அனைவரும் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சி தொடரவேண்டும் என்ற மனோ நிலையில் அனைவரும் விடைபெற்றோம்.