வியாழன்கிழமை 22/03/2012 அன்று மாலை துபாய் சபையில் சம்பைப்பட்டினம் அப்பா நாயகத்தின் நினைவு தினத்தை கொண்டாடும்முகமாக இராத்திபத்துல்காதிரியா மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.
திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.மதுக்கூர் முஹம்மது தாவூது அவர்களின் ஞானப்பாடலும் மற்றும் அதிரை அப்துல்ரஹ்மான், அப்பாஸ் ஷாஜகானின் சொற்பொழிவுடன்,
இந்நிகழ்வில் அதிரை அருட்கவி தாஹா அவர்கள் எழுதிய 'மும்மணிமாலை' நூல் வெளியீடும் அந்த நூலைப்பற்றிய அறிமுகத்தை பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் நிகழ்த்தினார்.
முதல் பிரதியை ஜாஹித் அலி மௌலானா மற்றும் ஜியாவுதீன் மௌலானா பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் நிறைவாக தப்ரூக் வழங்கப்பட்டது.
புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்