Friday, March 16, 2012

எங்கும் நிறைந்தே நீ ஆனந்தமே!

உன் உடல் ஆவி அனைத்தையும் இறைவனுக்காகத் தியாகம் செய்வதே, தியாகம் அனைத்திலும்
மிகவும் முக்கியமானது. நீ உன்னை இவ்வளவுதான் என மட்டுப்படுத்திக் கொள்ளாதிருப்பது.

நீ மட்டுப்படுத்தினால் அது உன்னை மட்டம் தட்டிவிடும். உன் உடலில் உள்ள சக்திப் பொருட்களெல்லாம் எங்கும் எல்லாவற்றிலும் தொடர்புள்ளவை என்பதை உணர்ந்துகொள்.
உதாரணமாக உன் உடலிலுள்ள நீர் ஆவியாகி மற்றெல்லா ஆவிகளுடன் கலந்து மேகமாகி
மழையாய்ப் பொழிகிறது.

அதனை நீயும் அருந்துகிறாய் ஏனையோரும் அருந்துகின்றனர். மற்றவைகளும் அதனை
உபயோகிக்கின்றன. நீ இதனை அறியாவிட்டாலும் இவ்வாறான தொடர்புகள் உன்னை
மற்றவர்களுடன் ஒன்றுபடுத்துகின்றன.

இப்படியே சிந்தித்துப்பார். அப்போது நீ மற்றப் பொருட்களுடன் கலந்து பெரும் தியாகி என்ற
உள்ளமைக்கு ஆளாக அந்தப் பேருண்மை உன்னை ஆட்கொள்கிறது . பேருண்மையாம்
அப்பரம்பொருள் உன்னை ஆட்கொள்ள நீ நடப்பதே பேரருந்தியாகமாகும்.

---சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.
Thanks - Sirajdeen