Sunday, March 11, 2012

கலீபா இல்லத்தில் மௌலிது நிகழ்ச்சி

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின தொடர் நிகழ்ச்சியில் மௌலிது மற்றும் கந்தூரி விழா துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A அவர்களின் இல்லத்தில் 09/03/2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு, சுபுஹான மௌலிதுடன் துவங்கியது.

இவ்விழாவிற்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அனைத்து உறுப்பினர்களும்,ஜமாலியா டெக்னிக்கல் சர்வீஸ் பணியாளர்களும் மற்றும் கலீபா இல்லத்தின் உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த மௌலிது கந்தூரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

மௌலிது நிகழ்ச்சிக்கு பிறகு கலீபா A.P.சகாபுதீன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றும் மௌலிது ஓதுவதின் அவசியத்தைப் பற்றியும் உரையாடினார்கள்.
இந்நிகழ்ச்சி திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்களின் தலைமையில் துவங்கியது.
நபிப்புகழ் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது மற்றும் அபுசாலிஹ் அவர்களும் பாடினார்கள்.
தலைமை உரையே சிறப்புரையாக சையதுஅலி மௌலானா உரையாடினார்கள் அதைத் தொடர்ந்து கீழக்கரை முஹிப்பில் உலமா முஹம்மது மஃரூப் அவர்களும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்.நிறைவாக அனைவருக்கும் கலீபா நன்றி கூறினார்...இனிதே சலாவாத்துடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பின் அனைவரும் ஜும்மா தொழுகைக்கு சென்றுவிட்டு கலீபா இல்லத்தில் கந்தூரி தப்ரூக் உணவு வழங்கப்பட்டது அனைவரும் உணவுஉண்டுச் சென்றனர்.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்