புத்த மதமும் இந்து மதமும் இறையறிவைப் பெற இரண்டு பக்கங்கள் உண்டு என்பதனை
ஒப்புக்கொள்கின்றன. ஆனால் அல்லாஹ்வை அறிவதற்கு "ழாகிர்" (வெளிரங்கம்), "பாதின்"
(உள்ரங்கம்) உண்டு என்பதைச் சிலர் ஏற்பதில்லை. இதைக் கூறப்போனால் சைவ சித்தாந்தம் பேசுகிறார்கள் எனவும் இஸ்லாத்தில் சைவ சித்தாந்தங்கள் கொள்கை இல்லை எனவும் (அறிவீனமாகக்) கூறிவிடுகிறார்கள்.
ரஸூல் (ஸல்) அவர்களைக் கொண்டு மார்க்கத்தைப் பரிபூரண மார்க்கமாக ஆக்கிவிட்டதாக
இறைவன் குர்ஆனில் (அக்மல்து லகும் தீனக்கும்) என்பதாகக் கூறுகிறான்.
அப்படிப்பட்ட சம்பூரண மார்க்கத்தில் அது இல்லை, இது இல்லை எனக் குறை கூறுவது
மடமையாகும். எல்லாக் குறைகளையும் நீக்கியவர்கள்தான் ரஸூல் (ஸல்) அவர்கள்.
எனவே தவ்ஹீது (ஏகத்துவம்) என்பது புதினமாகத் தோன்றியதல்ல. ஆதி தோன்றியபோதே தவ்ஹீதும் தோன்றிவிட்டது. ஆரம்பத்திலேயே "தவ்ஹீது" (ஏகத்துவம்) தோன்றிவிட்டது.
(எனவே ஏகத்துவம் ஒரு புதிய கொள்கை என யாரும் நினைக்க வேண்டாம்.)
---சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.
நன்றி - மதுக்கூர் சிராஜிதீன்