Saturday, February 11, 2012

இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மாபெரும் மீலாதுவிழா

இலங்கை வெலிகமையில் கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்)அவர்களின் உதயதின விழா 6-ஆம் ஆண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு பல நாடுகளிலிருந்தும் அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரியாவின் அன்பர்களும், பெருமானார் (ஸல்)அவர்கள் மீது அன்புக் கொண்ட நேசர்களும், இலங்கையின் பல மகாணங்களிலிருந்து பல அறிஞர்களும், ஆலிம் பெருமக்களும், வெலிகமை நகர மக்களும் ஒன்றாக இணைந்து கலந்துக் கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார்கள்.

பிப்ரவரி 3-ம் தேதி மாலை இவ்விழா துவங்கியது.
அஸர் தொழுகைக்குப் பின் புர்தா ஷரீப் மற்றும் இஃஷா தொழுகைக்குப் பின் ரசூல் மாலையும் ஓதப்பட்டது.

பிப்ரவரி 4-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சுபுஹான மௌலிது ஓதி மதியம் கந்தூரி வழங்கப்பட்டது.

பிப்ரவரி 5-ம் தேதி ஞாயிற்றுகிழமை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்து.

பிப்ரவரி 6-ம் தேதி உத்தம நபிகளின் உதயதின சிறப்பு சொற்பொழிவுகள் காலை 9.00 மணிமுதல் மாலை 8.30மணி வரை நடைபெற்றது.

இவ்விழாவில் முதல்முறையாக இலங்கைக்கு வருகைப்புரிந்த கண்மணி நாயகத்தின் மீது அதீத அன்புக் கொண்ட தன் வசியக்குரலால் பெருமானார் (ஸல்) அவர்களை நேசிப்பவர்களை நேசித்தவர் கண்மணி நாயகத்தை தனது உருது கவிகளால் அலங்கரித்து கேட்பவரை ஆனந்தடையச் செய்த கர்நாடாகா பீஜாப்பூரைச் சார்ந்த முஹம்மது ஹனீஃப்ரஜா காதிரியின் உருது பாடல்கள் வந்திருந்த அனைவரின் உள்ளத்திலும் உணர்வூட்டியது.

இவ்விழாவிற்கு இந்தியா சிங்கப்பூர் மலேசியா துபாய் கத்தார் குவைத்திலிருந்தும் வருகைப்புரிந்திருந்தனர்.