Saturday, January 21, 2012

ரபீஉல் அவ்வல் மாதம் முழுதும்...

ஓர் ஊரில் ஒரு முரீத் இருந்தாலும் அவர் ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும்
புனித மவ்லூது ஷரீபை ஓதி, கந்தூரி கொடுத்து அந்த மாதத்தைச் சிறப்பிக்க
வேண்டும்.

மவ்லூது-கந்தூரி சம்பந்தமான பல்வேறு ஆதார பூர்வ விஷயங்கள் அடங்கிய
நூல் (மருள் நீக்கிய மாநபி) ஒன்றை எழுதி சிலோனில் இலவசமாக விநியோகம்
செய்தோம். அநூலைப் படித்துப் பாருங்கள். அனேக விளக்கங்களை தெரிந்து
கொள்வீர்கள்.

கந்தூரி மீலாது விழாக்களைச் சிறப்பாக செய்யுங்கள். நமது ஊரில் மீலாது கந்தூரி
செய்வதால் நமக்கு மட்டுமல்ல நமது எதிரிகளுக்கும் நன்மையுண்டு. பெண்களும்
வீட்டில் மௌலூது ஷரீப் ஓத வேண்டும்.

ஹசன்-ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா மவ்லூதையும் ஓதுங்கள். பத்ரு
சஹாபாக்கள் மவ்லூதையும் ஓதுங்கள். இதனால் நன்மை பயக்குமேயன்றி
கேடு விளைவதில்லை.

ரசூலுல்லாஹ்வைப் புகழக் கூடாது என்று கூறிக்கொண்டு திரியும் வஹ்ஹாபிகள்
நிறைந்த ஊர்களில்தான் கஷ்டம், நஷ்டம், துன்பம் ஏற்படுவதைக் காணமுடிகிறது.
வஹ்ஹாபிகள் பரவியதால் தான் அமைதியான சூழ்நிலை அழிந்தே போய்விட்டது.
சிலோனில் கூட குழப்பங்களும் கஷ்டங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

வஹ்ஹபியத் தலைவர்கள் இன்று பெரிய ஷைகுமார்களாக, இமாம்களாக
ஆக்கப்பட்டு இஸ்லாத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறார்கள்.

கண்ணியமிக்க நான்கு இமாம்களை நாம் ஏற்கின்றோம் ஏனெனில், அவர்கள்
முழுக்க முழுக்க ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களைப்
பின்பற்றியவர்கள்.

எங்களுக்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கொண்டுவந்த
இஸ்லாம் மார்க்கமே போதும். இப்னு தைமிய்யாவின் வஹ்ஹாபிய்ய மார்க்கம்
எங்களுக்குத் தேவையில்லை. வஹ்ஹாபிகளை இனங்கண்டு அவர்களை
எதிர்ப்பதும் நம் தீவிரப் பணியாக இருக்க வேண்டும்.

----சங்கைமிகு ஷெயகு நாயகம் அவர்கள்.