அதி மதுரத்தின் பிரயோஜனம்
இதன் குணம் சூடும் வரட்சியுமாகும். இது காற்றை கண்டிக்கும். சத்துகள் மஷ்டை மலம் இவைகளின் காரணமாக ஏற்படும் தாகத்தை அடக்கும். நீரை இறக்கும் உதிரச் சிக்கலை அறுக்கும். உள் அவயங்களில் உள்ள மாசுகளை நீக்கும்.
நரம்புகளுக்கு வலுவை கொடுக்கும் பலவித இருமல்களையும் மாற்றும் ஈரல் இரைப்பை குடல் குரல் தொண்டை இவைகளின் வருட்சிகளை நீக்கும். நரம்புகளை பற்றிய நோய்களையும் நாட்பட்ட மூல முளையையும் நாசப்படுத்தும்.
சர்க்கரை சோம்பு சித்திர மூலச்சூரணம் வகைக்கு
1 வராகனிடை சேர்த்து சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் கடைசி வரை சாப்பிட்டு பயிற்சி செய்து கொள்கிறவனுக்கு ஒரு வியாதியும் வராது. தீராத தலைவலி ஒரு தலைவலி சுரம் இவைகள் தீரும். இதை தாய்ப் பாலில் அரைத்து கண்ணில் இட்டால் ஒளியுண்டாகும்.
இதன் இலையை அரைத்து உடலில் பூசி வந்தால் திரேக நாற்றம் அக்குள் நாற்றம் படை சொறி சிறங்கு இவைகள் அழிந்துப் போகும்.
இதன் தீங்கு – கொண்டக்காய்க்கும் முன்னீரலுக்கும் உதவாது
அதற்கு பரிகாரம்- உள்க்காய் ரோஜாப்பூ அல்லது சுக்கு சேர்த்துக் கொள்ளவும்.
- வைத்தியர் மன்னார்குடி அப்துல்மாலிக் ஹக்கியுல்காதிரி