Friday, September 4, 2009

இராத்தீப் நிகழ்சியும் மாதக்கூட்டமும்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் இராத்தீபும் செப்டம்பர் மாதக் கூட்டமும் 3/9/09 வியாழன் மாலை இஃதார் மஃரிப் தொழுகைக்குப் பின் நடைப்பெற்றது.

இராத்தீபு நிகழ்ச்சிக்குப் பின்னர் மாதக்கூட்டம் நடைப்பெற்றது. இம்மாதக் கூட்டத்திற்கு கண்ணியமிக்க கலீபா முஹம்மது காலீத் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.
அவர்களின் தலைமை உரையில் சங்கைமிக்க ரமளானில் பல உன்னதமான நிகழ்வுகளை அல்லாஹ்த்தால நடாத்தியுள்ளான்.

இந்த ரமளானில் இஸ்லாத்துடைய முதல் அறப்போர் நடந்திருக்கிறது. இந்த ரமளானில் திருக்குர் அருளப்பட்டிருக்கிறது. இந்த ரமளானில்தான் லைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களைவிட சிறப்புப் பெற்றிருக்கிறது… என்று ரமளானின் சிறப்புகளை கூறினார்கள்.

இவ்விழாவிற்கு வருகைப் புரிந்த இலங்கை புஸ்ரா மாதஇதழின் ஆசிரியர் கண்ணியத்திற்குரிய மவ்லவி ஆலிம் பத்ருதீன் ஷர்க்கி பரேலவி அவர்களின் உரையில் மனிதனுடைய நப்ஸ் தீயக்காரியங்களை செய்வதற்கு தூண்டுதலாக இருக்கிறது. நப்ஸை இலகுவாக அழிக்கமுடியாது. நப்ஸை கட்டுப்படுத்துவதற்கு அழிப்பதற்கு இறைவன் யாருக்கு ஹிதாயத் தந்திருக்கின்றானோ அவர்களே நப்ஸை வெல்ல முடியும். என்றும் மகான்களிடம் அண்டி நான் என்ற அகந்தையை அழிக்கமுடியும் என்றும் கூறினார்.

பின் சபையின் தலைவர் சஹாபுதீன் பேசுகையில் நோன்பின் சிறப்பைக் கூறிவிட்டு பல ஆண்டுகளாய் அமீரகத்தில் வாழ்ந்து பலஅன்பர்களுக்கு ஞானவிளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் கண்ணியமிக்க கலீபா முஹம்மது காலீத் அவர்கள் தங்களின் பணியை முடித்துக் கொண்டு தாயகம் செல்ல இருப்பதால் அவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு சால்வே அணிவித்து அவர்களின் ஞானச் சேவைகளை நினைவுக் கூர்ந்து பாராட்டிப் பேசினார்.

அதன்பின் செயளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் சரித்திர சம்பவங்களை எடுத்துக் கூறி பேசினார்.

இறுதியாக சையதுஅலி மௌலானா அவர்கள் கண்ணியமிக்க கலீபா காலீத் அவர்களின் பயணப்பிரிவைப் பற்றி சில நிமிடங்கள் உரையாற்றினார்கள்.
சுpலர் இரண்டு புத்தகங்களை படித்துவிட்டாலே தன்னைவிட அறிவாளி யாரும் உண்டோ என்று மார்த்தட்டிக் கொள்ளும் அவர்களுக்கு மத்தியில் கலீபா அவர்கள் நடமாடும் நூலகமாத் திகழக்கூடியவர்கள். எந்தவித அகந்தையும் இன்றி பணிவும் பக்குவமும் நிறைந்தவர்கள். அவர்வகள் தாயகம் சென்றாலும் மீண்டும் துபாய் வருவார்கள் என்று பேசினார்கள்.
இறுதியில் தௌபாபைத்துடன் கூட்டம் நிiவுப் பெற்றது.

இன் நிகழ்ச்சிக்கு பின் இஷாத் தொழுகையும் தராவீஹ் தொழுகையும் அங்கு நடைப்பெற்றது…
அனைத்து உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்து இவ்விழாவை சிறப்பித்தார்கள்…!