Saturday, February 9, 2013

குறிஞ்சிச் சுவை நூல் வெளியீடு

இலங்கை வெலிகமையில் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற்ற மீலான்னபி (ஸல்) அவர்களின் உதயதின பெருவிழா அத்தரீகத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவினரின் (ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை) ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல்அவுன் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களால் எழுதப்பட்ட "குறிஞ்சிச் சுவை" எனும் இன்பத் தமிழின் இலக்கிய நூலை வெளியிட்டார்கள்.

இந்த நூலின் முதல் பிரதியை இலங்கை INT  TVயின் டைரக்டரும் இலங்கை எழுத்தாளர்களால் வெளியிடப்படும் நூல்களை அதன் முதல்பிரதியை இதுவரையில் 450 நூல்களை பெற்றவரும், பல தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பவருமான புரவலர் ஹாசிம் உமர் "குறிஞ்சிச் சுவை" நூலைப் பெற்றுக் கொண்டார்.
மற்றும் மருள் நீக்கிய மாநபி நூலை சங்கைமிக்க மசூது மௌலானா, நூருல்அமீன் மௌலானா மற்றும் ஹாரீஸ் மௌலானா பெற்றுக் கொண்டார்கள்.
துபாயில் நடைபெற்ற மீலாதுன்னபி விழாவின் வீடியோ தொகுப்பை சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல்அவுன் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களால் வெளியிட அதை துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் பெற்றுக் கொண்டார்.


                                               "குறிஞ்சிச் சுவை" நூலின் முன்னுரை




எங்கணுமழகு, சுற்றிப் பார்க்குமிட​னெல்லாம் சு​வைதரும் எழிற் காட்சிகள். பலப்பல நிறங்க​ளைக் காழ்ந்து மனித​னைத் தன் பக்கம் இழுக்கின்றது மகா​பெரும் சத்து. 
பிரபஞ்ச​மே அதாய்த் திகழ்கின்ற ​தெனின் ​பொய்ப்படாது. அதனுள்​ளே நிகழும் படக்காட்சிக​ளென்ன விளங்கும் மாயா ரூபங்க​ளைப் ​போற் ​றோன்றுவன வ​னைத்தும் 

இக்காட்சிக​ளே, காண்​போர்க்கிது மயலாகலாம்.

த​​லைவ நாட்டுக் கழிலி நீரும் சாந்தும் அகிலும் ​சேர்ந்து மணத்தலும் பலவின் நறுங்கனி விடர​ளை ​​வைத்த இறாஅலின் கண்​ணே வீழ்ந்து சிதைத்தலும் கடாவரும் 
வ​ரை புரு​வை காத்தலும் குறவன் ஆர்ப்ப ​மென்றுளி இழிதலும் மன்றாடிப் ​பெய்யுஞ் சிறும​ழை குரம்​பையி​னை ம​றைத்தலும் ஆர​மெரிதலான் ம​லை சூழ நாறும் நறுமணமும் 

​கேழன் மாந்தும் ஏனலும் ​கேழல் கிளர்த்த ​செறுவும் குரக்குகளின் பல்வ​கைக் குறும்புகளும் குறுங்கால் வரு​டை ​நோக்கிக் கிள்​ளைகள் ​​வெரூஉதலும் மயில்களாலலும் 

குடி​​​ஞை யிரட்டலும் முதலான வியற்​கை எழிற்களும் ம​ழைவர மஞ்​ஞை யாலலும் ​​கொடிச்சியி னயனம் ​போல் குவ​ளை மலர்தலும் ​கொடிச்சியின் கூந்தலுக்கு மஞ்​​ஞையின் 

​தோ​கை உபமிக்கப்படலு முதலாமியற்​கை வனப்புகள் ​நேர் அனுபவங்களாய்த் திகழ்கின்றன காண்க.

கற்​ றோரிற் கற்​றோர் மட்டும் ஆர்ந்தின்புறும் மகிழ்ச்சியி​னை மற்றவரும் கற்றல் நலன் பயக்கும் என்பதால் இத​னை எழுத முற்பட்​டேன் என்க. இந்நுால் 

யாருக்கும் இன்பம் பயக்க வல்லது எனவுன்னி புளகாங்கிதம் ​கொள்கின்ற​னென். தமிழன்​னை இதனாற் புகழு​டைத்து. ஐங்குறு நுாறிற் குறிஞ்சியில் உள்ள இனிய பாக்களிற் 

சிலவற்​றை மட்டும் எடுத்து விளக்கியுள்​ளேன்.

வாழ்க நந்தமிழ்த் தா​யே!
வாழ்க அமிழ்​​தே!