Sunday, May 1, 2011

பசுமை நிறைந்த பத்து தினங்கள்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகர் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 14-ம் ஆண்டு துபாய் விஜயம், இறைவனின் கிருபையால் மிகவும் சிறப்படைந்தது.

ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து 29-ம் தேதி வரையில் மஹ்ஃரிப் தொழுகைக்குப் பின், நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் தினம் மஜ்லிஸ் நடைப்பெற்றது.

இந்த மஜ்லிசிற்கு முரிதீன்களும் மற்றும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களும் கலந்து தங்களின் சந்தேகங்களை ஷெய்குனாவிடம் கேட்டு தெளிந்தார்கள்.

தினம் நடைப்பெற்ற மஜ்லிசில் பலவிதமான கேள்விகளுக்கும் பதிலளித்து விளக்கமளித்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் இராத்திபத்துல் காதிரிய்யா சிடியும், பர்ஜன்ஸி மௌலூது கிதாபும் வெளியிடப்பட்டது.

29-ம் தேதி நடைப்பெற்ற மஜ்லிசில் என்னை நேசிக்கக் கூடியவர்கள் நான் ஏற்படுத்திய சபைக்கு கட்டாயம் வரவேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்கள்.

முரிதீன்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் உள்ளங்களை சந்தோசப்படுத்தினார்கள்.

புனிதமிக்க மஜ்லிஸ்சிற்கு துபாய் அரசாங்க அவ்காப் டைரக்டர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களும் மற்றும் பல அமைப்பின் பொறுப்பாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் கலந்துக் கொண்டு ஷெய்குனாவை சந்தித்து துவா பெற்றார்கள்.

டோஹா கத்தாரிலிருந்து சகோதரர் பக்ருதீன் அவர்கள் செய்குனாவைச் சந்திப்பதற்காவே வருகைப்புரிந்திருந்தார்கள்.

ஏப்ரல் 30-ம் தேதி இரவு சங்கைமிகு ஷெய்குனா அவர்கள் துபாயிலிருந்து இலங்கைக்கு பயணம் புறப்பட்டார்கள்.

பத்துதினங்கள் பெருநாட்களாக ஞானம்பெரும் நாட்களாக விரைந்தது.

முரிதீன்களின் முகமும் அகமும் மலர்ந்து மனக் கரைகளெல்லாம் கரைந்தது.

இறைச்சிந்தனையில் பெருமானார் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்களின் மீது கொண்ட நினைவே பேரின்பமாய் லயித்தது.

நம்மைக் கடந்த நாட்களை மறக்க முடியாமல் இது மறுமைவரை தொடர நம்மனம் விரும்பியது.

இந்த சிறப்புமிக்க தினங்களில் இந்நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சார்பாக நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.