Wednesday, April 20, 2011

சங்கைமிகு ஷைகுனா துபாய் வருகை


ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும், கண்மணிநாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் திரு குடும்பத்தினருமான சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் வளைகுடாவிற்கு ஆன்மீக சுற்றுப் பயணமாக ஏப்ரல் 14ம் தேதி குவைத்திற்கு சென்றார்கள்.

அவர்களுடன் இந்தியாவிலிருந்து ஆலிம் பெருந்தகை புலவர் கலீபா S.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களும், ஷாஜகான் மகனார் அலிஅக்பர் அவர்களும், துபாயிலிருந்து சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A அவர்களும் உடன் சென்றிருந்தனர்.

குவைத் சுற்றுப்பயணத்தை நிறைவுச் செய்துவிட்டு, ஏப்ரல் 19ம் தேதி இரவு 10.00 மணிக்கு, 14ஆம் ஆண்டு, விஜயமாக துபாய் வருகைப் புரிந்துள்ளார்கள்.

சங்கைமிக்க ஷைக்குனாவை வரவேற்கும் முகமாக துபாய் முரீதீன்கள் மிக ஆர்வத்துடன் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் குழுமியிருந்து அவர்களை சங்கையுடன் வரவேற்றனர்.


சங்கைமிகு ஷெய்குனாவை வரவேற்க துபாய் விமான நிலையத்தில் காத்திருக்கும் ஆன்மீக சகோதரர்கள்







விமான நிலையத்திலிருந்து வெளியில் வருகிறார்கள்

















நன்றி
புகைப்படங்கள் - அமீர்அலி,RAJA MOHAMED

ரோல்பேனர் - அபுல்பஸர்