துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 27/.2/2011 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித மௌலூது ஷரீப் நிகழ்ச்சிக்கு பின்னர்
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் இந்திய பொதுச் செயலாளர் சே.மு.முகமதலி, கவிச்சித்தர் மு.மேத்தா, காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஆகிய இஸ்லாமிய இலக்கிய தமிழறிஞர்களுக்கு சபையின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A தலைமை தாங்கினார்.
அதிரை அப்துல்ரஹ்மான் கிராஅத் ஓதி துவங்கினார்
பாடகர் முஹம்மது தாவூது நபிப் புகழ்கீதம் இசைத்தார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடையும் நினைவு பரிசும் மௌலானாமார்கள் வழங்கி கொளரவித்தார்கள்.
பொதுச்செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத்தார்களும், லால்பேட்டை ஜமாஅத்தார்களும் மற்றும் ஈமான் அமைப்பின் ஆடிட்டர் எஸ்.எம்.பாருக், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீகரகத்தின் விழாகுழு செயலாளர் ராஸாகான் மற்றும் ஊடகத்துறையாளர் முதுவை ஹிதாயத் இன்னும் பல அமைப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவை கிளியனூர் இஸ்மத், அதிரை சர்புதீன், மன்னார்குடி ஷேக்தாவூது, அப்துல்மாலிக், அமீர்அலி, அபுல்பசர் ஏற்பாடு செய்தார்கள்.
நிறைவாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு நிறைவடைந்தது.