Monday, February 28, 2011

மதுக்கூரில் மீலாதுவிழா


மதுக்கூர் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கமும், மிப்தாகுல்
இஸ்லாம் சங்கமும், ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டியுடன் சேர்ந்து
கண்மணி நாயகம் ரசூலே கரீம் சள்ளல்லாகு அலைஹி வசல்லம் அவர்களின்
மீலாது விழாவை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் 27.02.2011
ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தின.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் புனித மௌலிது ஷரீப்
நிகழ்ச்சி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

மாலை 5.00 மணியளவில் மதரசா மாணாக்கர்களுடைய நிகழ்ச்சி
நடைபெற்றது. மக்ரிபுக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் P.S.K.N.
அமானுல்லா அவர்கள் தலைமையேற்க N.S.M முஹம்மது பாரூக் அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார். ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டி
உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

மௌலவி M.முஹம்மது அலி நூரி கிராஅத் அவர்கள் ஓதினார்.

சிறப்பு சொற்பொழிவினை K.A முஹியுத்தீன் அப்துல்காதர் பேராசிரியர்
மிப்தாகுல் ஹுதா அரபிக்கல்லூரி நீடூர் அவர்கள் நிகழ்த்தினார்.

விழாவின் முடிவில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக தப்ரூக்
வழங்கப்பட்டது

நன்றியுரை: M.K.M அப்துல்கரீம் அவர்கள்

தகவல் , புகைப்படங்கள் :Er.A. இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி,மதுக்கூர்